தல போல வருமா, கேப்டனாக சுயநலமின்றி எம்எஸ் தோனி நடந்து கொண்ட 3 தருணங்கள்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில் இத்தொடர் முழுவதும் இதர வீரர்கள் தடுமாறிய போது சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு போராடிய இளம் வீரர் திலக் வர்மாவை 50 ரன்கள் தொடவிடாமல் கேப்டன் ஹர்திக் பாண்டியா சுயநலமாக நடந்து கொண்டதாக ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் கொந்தளித்தனர். அதே சமயம் 2014 டி20 உலக கோப்பையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான செமி ஃபைனலில் விராட் கோலி போராடி வெற்றியை கொண்டு வந்தும் ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பு கேப்டன் தோனிக்கு கிடைத்தது. ஆனால் அதை செய்யாத தோனி வெற்றிக்கு பாடுபட்ட இளம் வீரர் விராட் கோலிக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும் வகையில் ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பை கொடுத்தார்.

அதை சுட்டிக்காட்டிய ரசிகர்கள் உங்களால் எப்போதுமே தோனியாக வர முடியாது என்று பாண்டியாவை விமர்சித்தனர். அந்தளவுக்கு அணி மற்றும் வீரர்களின் நலனுக்காக செயல்பட்ட காரணத்தாலேயே தோனி 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகவும் வரலாற்றின் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கொண்டாடப்படுகிறார். ஆனாலும் செல்பிஷ், பாராட்டுகளை திருடுபவர் என்ற பட்டத்தை ஒருத்தரப்பு ரசிகர்கள் அவருக்கு சூட்டுவது வழக்கமாகும். அவர்கள் முகத்தில் கரியை பூசும் அளவுக்கு சுயநலமின்றி நடந்து கொண்ட தோனியின் 3 தருணங்களை வீடியோ ஆதாரத்துடன் பார்ப்போம்:

- Advertisement -

1. இளம் வீரர் யார்: கடந்த 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிபி முத்தரப்பு ஒருநாள் தொடரை தோனி தலைமையில் இந்தியா வென்றதை மறக்க முடியாது. அதில் வெற்றியாளருக்கு அளிக்கப்பட்ட பரிசு கோப்பை வாங்கிய தோனி எதிரே இருந்த மேஜையில் வைத்துவிட்டு “அணியில் இருப்பவர்களில் யார் மிகவும் இளமையானவரோ அவர் வந்து கோப்பையை தூக்க வாருங்கள்” என்று சொல்லி அழைத்தார்.

அந்த வகையில் பியூஸ் சாவ்லா கோப்பையை தூக்கியது தோனி எந்தளவுக்கு சுயநலமற்றவர் என்பதை காட்டுவதாக அமைந்தது. சொல்லப்போனால் அன்றைய நாளில் அவர் துவங்கி வைத்த இளம் வீரர் கையில் கோப்பையை கொடுத்து கேப்டன் ஓரமாக நின்று போஸ் கொடுக்கும் ட்ரெண்ட் இப்போது வரை இந்திய அணியில் நீடிக்கிறது.

- Advertisement -

2. காரணம் என்ன: இப்படி செய்வதற்கான காரணம் என்ன என்று பல வருடங்களுக்கு முன்பாகவே கேட்ட போது கோப்பையை இளம் வீரரிடம் கொடுக்கும் போது அது வருங்காலங்களில் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே அவ்வாறு செய்வதாக தோனி தெரிவித்திருந்தார். இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “ஒரு தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரரிடம் நீங்கள் கோப்பையை கொடுக்கும் போது அது அவருக்கு இன்னும் கூடுதலான உத்வேகத்தை கொடுக்கும்”

“மேலும் அது அவர் வெற்றிக்கு போராடியதை பாராட்டும் வகையிலும் அமையும். அத்துடன் கோப்பையை வென்ற நாம் அதை யார் கையில் வைத்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஆனால் அது இளம் வீரர் கையில் இருந்தால் வருங்காலங்களில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சிறப்பாக செயல்படுவதற்கான உத்வேகத்தை கொடுக்கும் என்று கூறினார்.

- Advertisement -

இது மட்டுமில்லாமல் சென்னைக்காக விளையாடிய போது ஒரு ரசிகர் எங்களுக்கு பெற்றுக் கொடுத்த அனைத்து கோப்பைகளுக்கும் நன்றி என்று நேரலை உரையாடலில் தோனியை பாராட்டினார். ஆனால் அப்போது குறுக்கிட்ட தோனி “கோப்பையை வென்றது மொத்த அணி” என்று பதிலளித்து அணி வீரர்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார்.

3. தோல்விக்கான பழி: அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் நிறைய தருணங்களில் தோல்வியை சந்திக்கும் கேப்டன்கள் விமர்சன கேள்விகளை தவிர்க்க செய்தியாளர் சந்திப்பையே புறக்கணித்து பயிற்சியாளர் அல்லது மற்ற வீரர்களை அனுப்புவார்கள்.

- Advertisement -

ஆனால் தம்முடைய காலங்களில் வெற்றியை பதிவு செய்யும் போதெல்லாம் வெற்றி பெறும் போது அதில் முக்கிய பங்காற்றிய வீரரை செய்தியாளர் சந்திப்புக்கு அனுப்பும் தோனி தோல்வியை சந்திக்கும் போது அதன் பழியை ஏற்கும் வகையில் தாமாக செய்தியாளர் சந்திப்புக்கு செல்வார் என்று அவரது தலைமையில் விளையாடிய மோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:பாண்டியா தல ரசிகனா இருந்தாலும் தோனி மாதிரி நடந்துக்கணும்னு அவசியமா? முன்னாள் இந்திய வீரர் யூடர்ன் பேட்டி

அது போக 2023 ஐபிஎல் ஃபைனலில் ராயுடு, ஜடேஜாவை கோப்பையை வாங்க வைத்தது போல பல தருணங்களில் தோனி சுயநலமற்றவராகவே நடந்து கொண்டுள்ளார். ஆனால் 2011 உலகக்கோப்பை வெற்றியின் மொத்த பாராட்டும் தோனிக்கு மட்டுமே கிடைத்ததாக கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சிப்பது தொடர்கதையாகவே இருக்கிறது.

Advertisement