ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களிடம் முரட்டு அடி வாங்கி பந்து வீச்சில் சதமடித்த டாப் 3 பவுலர்கள் – பரிதாப பதிவு

Wahab-riaz-2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் எப்படியாவது விழுந்து விழுந்து பவுலர்களை அடித்தாவது சதமடித்து தங்களது அணியை வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்ற முனைப்புடன் பேட்ஸ்மேன்கள் களமிறங்குவார்கள். போதாக்குறைக்கு நோ-பால் போட்டால் ஃபிரீ ஹிட் என வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிறைய அடிப்படை விதிமுறைகளே பவுலர்களுக்கு எதிராக உள்ளது. அப்படி நவீன கிரிக்கெட்டில் விதிமுறைகளையும் தாண்டி முரட்டுத்தனமாக கருணை காட்டாமல் அடித்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து தங்களது அணியை வெற்றி பெற வைப்பதற்குள் உண்மையாகவே பந்து வீச்சாளர்கள் படாத பாடுபட்டு விடுகிறார்கள் என்றே சொல்லலாம்.

அதில் சில கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு நிறைய விக்கெட்களை எடுத்து வெற்றி பெற வைக்கும் பவுலர்கள் பெரும்பாலான போட்டிகளில் குறைந்தபட்ச மானம் காற்றில் பறக்காத அளவுக்கு ஓரளவு அசத்துவார்கள். ஆனால் பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் எதிரணி பேட்ஸ்மேன்கள் ஓரளவு நன்கு செட்டிலாகி விட்டால் எப்படி பந்து வீசினாலும் பவுலர்களை அடித்து நொறுக்குவார்கள். போதாகுறைக்கு இதர பவுலர்களும் தடுமாறினால் வேறு வழி தெரியாத கேப்டன் ஒரு குறிப்பிட்ட பவுலருக்கு முழுமையான 10 ஓவர்கள் பந்து வீச கொடுப்பார். அது போன்ற சமயங்களில் பந்து வீச்சில் அந்த பவுலர்கள் சதமடித்த கதைகள் நிறைய உள்ளன.

- Advertisement -

குறிப்பாக சமீபத்தில் இந்தூரில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டூபி 10 ஓவரில் மிகச் சரியாக 100 ரன்கள் கடந்து சதமடித்து பரிதாபத்திற்கு உள்ளானார். ஆனால் வரலாற்றில் அவரையும் மிஞ்சி ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் சதமடித்து அதிக ரன்களை கொடுத்த டாப் 3 பந்து வீச்சாளர்களை பற்றி பார்ப்போம்.

1. மிக் லெவிஸ் 113: கடந்த 2006ஆம் ஆண்டு ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 434 ரன்கள் குவித்ததையும் அதை வெறித்தனமாக போராடி கடைசி ஓவரில் வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகரமாக சேசிங் செய்து தென் ஆப்பிரிக்கா உலக சாதனை படைத்ததையும் யாராலும் மறக்க முடியாது.

- Advertisement -

அப்படி உலக சாதனை படைக்கப்பட்ட அந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் இதர ஆஸ்திரேலிய பவுலர்கள் 9 எக்கனாமியை தாண்டாத நிலையில் இவர் மட்டும் விக்கெட் எதுவும் எடுக்காமல் 10 ஓவரில் 13 பவுண்டரி 4 சிக்ஸர்களை கொடுத்து சதமடித்து 113 ரன்கள் வாரி வழங்கினார். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த பவுலர் என்ற பரிதாப உலக சாதனையும் அவர் படைத்தார். அவரது மோசமான பவுலிங் ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த நிலையில் அதுவே அவருடைய கேரியரின் கடைசி போட்டியாகவும் அமைந்தது.

2. வகாப் ரியாஸ்: கடந்த 2016ஆம் ஆண்டு நாட்டிங்கம் நகரில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் பவுலர்களை சூறையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 444/3 ரன்கள் விளாசி அந்த சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து உலக சாதனை படைத்தனர்.

- Advertisement -

அந்த சூறையாட்டத்தில் ஒருவராக சிக்கிய இவர் 10 ஓவரில் 12 பவுண்டரிகளையும் 4 சிக்ஸர்களையும் கொடுத்து 110 ரன்களை வாரி வழங்கினார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வாரி வழங்கிய பாகிஸ்தான் பவுலர் என்ற பரிதாப சாதனை படைத்த அவர் இறுதியில் 169 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க முக்கிய காரணமாகவும் அமைந்தார்.

3. ரசித் கான்: கடந்த 2019ஆம் ஆண்டு மான்செஸ்டரில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அதிரடியில் 397/6 ரன்கள் குவித்தது. குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நம்பர் ஒன் ஸ்பின்னராக கருதப்படும் இவரது மேஜிக் அன்றைய நாளில் வேலை செய்யவில்லை.

இதையும் படிங்க: பந்து பழசான எல்லாரும் கஷ்டப்படுவாங்க. ஆனா இவரு ஈஸியா பேட்டிங் பண்றாரு – இர்பான் பதான் புகழாரம்

மாறாக மோர்கன் உள்ளிட்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்களிடம் முரட்டு அடி வாங்கிய அவர் வெறும் 9 ஓவரிலேயே 3 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்களை கொடுத்து 110 ரன்களை வாரி வழங்கி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை கொடுத்த ஆப்கானிஸ்தான் பவுலராக பரிதாப சாதனை படைத்தார். இறுதியில் அந்த அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

Advertisement