பந்து பழசான எல்லாரும் கஷ்டப்படுவாங்க. ஆனா இவரு ஈஸியா பேட்டிங் பண்றாரு – இர்பான் பதான் புகழாரம்

pathan 1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த மூன்றாவது போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியானது 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.

Shardul Thakur

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறைகளிலுமே வீரர்கள் அசத்தலாக செயல்பட்டதால் தற்போது ரசிகர்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர். பேட்டிங்கில் ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதேவேளையில் பந்து வீச்சிலும் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். ஹார்டிக் பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் மிகச் சிறப்பான ஃபார்மில் உள்ளார். முதலாவது போட்டியில் சற்று மோசமாக பந்துவீசி இருந்தாலும் இரண்டாவது போட்டியில் இரண்டு விக்கெட்டும், மூன்றாவது போட்டியில் ஒரு விக்கெட் என அசத்தலாக பந்து வீசினார்.

Hardik Pandya

அதுமட்டும் இன்றி போட்டியின் முடிவை தீர்மானித்த கடைசி மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். இப்படி தனது சிறப்பான ஃபார்மில் இருக்கும் ஹார்டிக் பாண்டியா குறித்து பேசியுள்ள இர்பான் பதான் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா முக்கியமான ஒரு வீரர். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே அவர் செய்வது மட்டுமின்றி அணிக்கு சரியான பேலன்ஸை அவர் தருகிறார்.

- Advertisement -

அவரைப் போன்ற ஒரு வீரரை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். வெகுசிலர் மட்டுமே இது போன்ற திறமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பாண்டியா ஸ்ட்ரெயிட் திசையில் அவர் விளையாடும் புல் ஷாட் ஆச்சரியப்பட வைக்கிறது. ஏனெனில் கிரிக்கெட் மைதானத்தில் டென்னிஸ் பந்தில் விளையாடுவது போன்று அவர் விளையாடுகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் பந்து பழையதானால் திணறுவார்கள். ஆனால் ஹார்டிக் பாண்டியா எளிதாக ஆடுகிறார்.

இதையும் படிங்க : சூரியகுமார் யாதவ் தேர்வில் மோதிக்கொண்ட பிரக்யான் ஓஜா – அபினவ் முகுந்த், யாருடைய கருத்து சரி?

அவரது பார்மை இந்த சில ஷாட்களே வெளிக்காட்டுகின்றன. அவர் பார்மில் இருக்கும் போது அவரை தடுத்து நிறுத்துவது கடினம் என்று இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்த கையோடு அடுத்ததாக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹார்டிக் பாண்டியா கேப்டனாக வழிநடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement