மும்பை அணியில் இடம்பெற்றிருந்தாலும் இந்த 3 பேருக்கு விளையாட வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் – விவரம் இதோ

MI
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தற்போது 13 சீசன் களை கடந்து 14வது சீசனுக்கு வந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரானது ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. உலகில் உள்ள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளதால் ரசிகர்களிடையே இந்தத்தொடர் குறித்த எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.

ipl

- Advertisement -

இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் ? எந்த வீரர் நன்றாக விளையாடுவார் ? எந்த பவுலர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என அனைவரும் தங்களது கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி சில வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. அப்படி ஏலத்தில் எடுத்த வீரர்கள் மட்டுமின்றி ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் ஒரு மூன்று வீரர்கள் இந்த தொடர் முழுவதும் பெஞ்சில் உட்கார வைக்கப் பட வாய்ப்பு இருக்கிறது. அந்த மூன்று பேரில் குறித்த விவரத்தை இந்த பதிவில் காண உள்ளோம்.

arjun tendulkar

1) அர்ஜுன் டெண்டுல்கர் : சச்சினின் மகனான இவர் 2019ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பவுலராக இருந்து வருகிறார். அடிப்படை விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர் இந்த சீசனில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு இருக்கிறது என்றும் மற்றபடி அனைத்து போட்டிகளிலும் அவர் வெளியே அமரவே வாய்ப்புள்ளது.

- Advertisement -

tare

2) ஆதித்யா தாரே : 2015ஆம் ஆண்டு வரை மும்பை இந்திய அணிக்காக விளையாடி வந்த இவர் சொதப்பலான ஆட்டம் காரணமாக வெளியேற்றப்பட்ட போது மீண்டும் மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார். இதுவரை 35 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் பெரிதளவு சோபிக்க வில்லை என்பதால் யாரும் யாரையும் பேட்ஸ்மேன்களுக்கு அடி பட்டால் மட்டுமே இவர் விளையாட வாய்ப்பு உள்ளது.

dawal

3) தவால் குல்கர்னி : மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே பல சிறப்பான பந்து வீச்சாளர்களை தன்வசம் வைத்துள்ளதால் இவர் இந்த தொடரில் விளையாடுவதும் சந்தேகம் தான் ஆனாலும். இதுவரை 91 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 86 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement