பஞ்சாப் அணி கழட்டிவிட்ட மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும் 3 அணிகள் – விவரம் இதோ

Maxwell
- Advertisement -

2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 வது ஐபிஎல் சீசனின் மினி ஏலத்தை பிப்ரவரி 18ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கு முன்னர் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Maxwell

- Advertisement -

அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியின் ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களின் பட்டியலையும் மோசமாக விளையாடியதால் வெளியேற்றப்படும் வீரர்களையும் அறிவித்திருக்கிறது.
அவ்வாறு கடந்த ஆண்டு 10.5 கோடி செலவில் பஞ்சாப் அணியில் தேர்வு செய்யப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு அவரது மோசமான ஆட்டம் காரணமாக வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இவர் ஐபிஎல் தொடரை தவிர மற்ற அனைத்து தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

கடந்த ஐபிஎல் தொடர் முடிந்து இந்தியாவுடன் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடரில் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கிளன் மேக்ஸ்வெல் ஐபில் அணியில் வெளியேற்றப்பட்டு இருப்பதால் அவரை மீண்டும் அணியில் எடுக்க 3 ஐபில் அணிகள் முயற்சி செய்து வருகிறது.

rcb

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : பெங்களூர் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆரோன் பின்ச் இந்த ஆண்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதனால் பெங்களூர் அணிக்கு மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பெங்களூர் அணி ஆஸ்திரேலியா அதிரடி வீரரான மேக்ஸ்வெல்லை எடுக்க முயற்சி செய்து வருகிறது.

- Advertisement -

csk 1

சென்னை சூப்பர் கிங்ஸ் : சென்னை அணி இந்த ஆண்டு கேதர் ஜாதவ், ஷேன் வாட்சன், முரளி விஜய் உள்ளிட்ட வீரர்களை வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இதில் அதிரடி பேட்ஸ்மேன் வாட்சன் உரிமையாளர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அவரது இடத்தை நிரப்புவதற்கு ஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல் சரியாக இருப்பார் என்று எதிர்பார்த்து சென்னை அணியும் தங்கள் அணியில் தேர்வு செய்ய முயற்சி செய்து வருகிறது.

dc

டெல்லி கேப்பிடல்ஸ் : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருந்தது. ஆனால் பேட்டிங்கில் சொதப்பி கோப்பையை தவற விட்டது. இதன் காரணமாக தற்போது டெல்லி அணி தங்களது டாப் ஆர்டரை பலம் செய்வதற்காக மேக்ஸ்வெல்லை தேர்வு செய்ய முயற்சி செய்து வருகிறது.

Advertisement