ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் கூட கேப்டனாக செயல்படாத 3 டி20 லெஜண்ட்ஸ் – லிஸ்ட் இதோ

RCB
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவிருக்கிற்து. ஐபிஎல் தொடர் துவங்க இரண்டு வாரங்களே உள்ள நிலையில் நேற்று ஐ.பி.எல் தொடருக்கான அட்டவணை வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஐ.பி.எல் தொடர் குறித்த பல சுவாரசியமான செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ipl

- Advertisement -

இந்நிலையில் இந்த பதிவில் இத்தனை வருடங்களாக பல்வேறு அணிகள் பல முக்கிய சர்வதேச ஜாம்பவான் வீரர்கள் ஆடியிருக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எடுத்துக்கொண்டால் பல வீரர்கள் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார்கள். சுரேஷ் ரெய்னா, பிரண்டன் மெக்கல்லம், மேத்யூ ஹைடன் போன்ற ஏகப்பட்ட வீரர்கள் கேப்டனாக இருந்து தோனியின் தலைமையில் விளையாடியிருக்கிறார்கள். அதேபோல் பல வீரர்களும் இருக்கின்றனர்.

இதில் சில வீரர்கள் டி20 போட்டிகளில் ஜாம்பவான்களாக இருந்தும் ஒரு போட்டியில் கூட ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்ததில்லை. தனது அணிக்காக ஒரு வீரராக தற்போது வரை உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் சர்வதேச அளவில் தங்களது அணிக்கு கேப்டனாக இருந்தும் ஐ.பி.எல் தொடரில் கேப்டனாக செயல்படவில்லை.

gayle

அந்தவகையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ,ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய கிறிஸ் கெயில் இதுவரை 125 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 6 சதங்களுடன் 4484 ரன்கள் குவித்துள்ளார். ஆனால் தற்போது வரை ஒரு ஐ.பி.எல் போட்டியில் கூட கேப்டனாக இருந்ததில்லை.

Malinga

அதேபோல் கடந்த பத்து வருடமாக பெங்களூர் அணிக்காக ஆடி வரும் ஏபி டி வில்லியர்ஸ், மற்றும் கடந்த 12 வருடமாக மும்பை அணிக்காக ஆடிவரும் லசித் மலிங்கா ஆகிய வீரர்கள் தங்களது அணிகளுக்காக தலைமை தாங்கி ஒரு முறை கூட வழி நடத்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்கள் மூவருமே தங்களது அணிகளுக்காக சர்வதேச அளவில் கேப்டனாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement