நல்ல டேலண்ட் இருந்தும் கொறஞ்ச ரேட்டுக்கு ஏலம் போன 3 இந்திய இளம் வீரர்கள் – லிஸ்ட் இதோ

Riyan
- Advertisement -

ஐபிஎல் தொடர் என்பது ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் சந்தை. வீரர்களின் திறமையும் மதிப்பும் அவ்வப்போது அதிகமானாலும் இதுவும் சூதாட்டத்தை போன்றதுதான். திடீரென ஒரு வீரர் உச்சத்திற்கு சென்று விடுவார், திடீரென அதிக திறமை வாய்ந்த வீரர்கள் அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டு விடுவார்கள்.

அப்படி மிகவும் அதிகமான திறமை இருந்தும் குறைந்த மதிப்பில் ஏலத்திற்கு எடுக்கப்பட்ட மூன்று வீரர்களின் பட்டியலைப் பார்ப்போம்.

- Advertisement -

Mayank

மயான்க் மார்க்கண்டே :-

இவர் 2018 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானார். சுழற்பந்து வீச்சாளரான இவர் 20 லட்சம் கொடுத்து எடுக்கப்பட்டார். 14 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நன்றாக திறமையிருந்தும் தற்போது வரை இவர் 20 லட்சம் தான் சம்பளம் பெற்று வருகிறார்.

- Advertisement -

Tripathi

ராகுல் திருப்பாதி :-

தோனி ஆடிய புனே அணிக்காக விளையாடியவர். இவர் 2017 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அதிரடியாக ஆடுவதில் வல்லவர். 14 போட்டிகளில் விளையாடி 391 ரன்கள் குவித்து இருந்தார்.

- Advertisement -

அப்போது பத்து லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து ராஜஸ்தான் அணி 3.4 கோடி கொடுத்து ஒப்பந்தத்தில் எடுத்தது. அப்போதும் அவரை அந்த அணி ஆட வைக்க வில்லை. தற்போது 2020 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி இவரை வெறும் 60 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Shreyas Gopal

ஸ்ரேயாஸ் கோபால் :-

இவர் கர்நாடக அணியின் ஆல்ரவுண்டர். 2014 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 லட்சம் கொடுத்து இவரை எடுத்தது.

அந்தத் தொடரில் மட்டும் 14 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ் போன்ற வீரர்களையும் இவர் வீழ்த்தியிருக்கிறார், ஹாட்ரிக் விக்கெட் எடுத்து இருக்கிறார். ஆனால் இவற்றின் மொத்த மதிப்பு வெறும் 20 லட்சம் தான்.

Advertisement