140 கி.மீ வேகத்திற்கு மேல் பந்துவீசி அசத்திவரும் 3 இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரானது கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதுவரை இத்தொடரில் 29 லீக் லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இதற்கிடையில் இத்தொடரில் பங்கேற்றிருந்த சில வீரர்களுக்கு கொரானா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இத்தொடரின் மற்ற போட்டிகள் எப்போது நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. நடப்பு ஐபிஎல் தொடர் இப்படி பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தாலும், இத்தொடரில் 3 இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய அதிவேக பந்து வீச்சினால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

கிரிக்கெட்டில் வேகமான பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைப்பதில் வெளிநாட்டு பாஸ்ட் பௌலர்கள் கைதேர்ந்தவர்கள். ஆனால் இந்த இளம் வீரர்களும் வெளிநாட்டு வீரர்களுக்கு இணையான வேகத்தில் பந்துகளை வீசி, வெளிநாட்டு வீரர்களுக்ககு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். அந்த வீரர்களின் விவரம் கீழே வருமாறு,

- Advertisement -

முஹம்மது சிராஜ்:

27 வயதான முகமது சிராஜ் 2015ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அப்போது அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பிறகு 2018 ஆம் ஆண்டு அவரை ஏலத்தில் எடுத்தது பெங்களூர் அணி. அதைத் தொடர்ந்து முகமது சிராஜிற்கு தொடர்ந்து ஆடும் அணியில் வாய்ப்பு வழங்கி வந்தார் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி. தனக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட போட்டிகளில் எல்லாம் தனது திறமையை நிரூபித்த முகமது சிராஜிற்க்கு 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, இந்திய அணியின் ஒரு நாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு, அதைத் தொடர்ந்து வந்த டெஸ்ட் சீரிஸிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுதான் அவருடைய வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்பு முனை என்றே கூறலாம். இந்திய அணியில் விளையாடிய அனுபவத்தின் காரணமாக, ந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான பர்ஃபாமன்ஸை வழங்கியிருக்கிறார் இந்த இளம் வீரர். வெறும் வேகமான பந்துகளை மட்டுமே வீசாமல், ஒவ்வொரு பந்திற்கும் நிறைய வேரியேஷன்களை காட்டி பேட்ஸ்மேன்களை அச்துறுத்தி வரும் முஹம்மது சிராஜ், இந்திய அணியில் ஒரு தவிர்க் முடியாத வீரராக உருவெடுப்பார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Prasidh

பிரசித் கிருஷ்ணா:

- Advertisement -

2018ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்து, ஐபிஎல் அணிகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த பிரசித் கிருஷ்ணா, அந்த ஆண்டே நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் தனது அதிவேகமான பந்து வீச்சின் மூலம் அசத்திய பிரசித் கிருஷ்ணாவுக்கு, இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான ஒரு நாள் தொடரில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்த பிரசித் கிருஷ்ணா, அதற்கு அடுத்த போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியா அந்த போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் உதவி செய்தார். எப்போதும் ஆட்டத்தின் துவக்க ஓவர்களை வீசிக்கொண்டிருந்தவர், தற்போது நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிடில் ஓவர்களிலும் பந்து வீசி தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.

அவேஷ் கான்:

2017 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அறிமுகமான இவர், அடுத்த ஆண்டே டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் 75 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஏற்கனவே 145 கிலோ மீட்டருக்கு மேல் பந்து வீசி வரும் வெளிநாட்டு பாஸ்ட் பௌலரான ஆன்ரிச் நோர்க்கியாவிற்கு வாய்ப்பளிக்காமல், அவேஷ் கானின் திறமையின் மேல் நம்பிக்கை வைத்து அவரை அணியில் தொடர்ந்து விளையாட வைத்தது டெல்லி அணி. அனைவரும் அதிசயித்து பார்க்கும் படி இந்த தொடரில் பந்து வீசிய அவேஷ் கான், 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி , இத்தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியிலில் இரண்டாமிடத்தில் இருக்கிறார். 24 வயதே ஆன அவேஷ் கான் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது உறுதி என்றே சொல்லலாம். ஏற்கனவே இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் நெட் பவுலராக அவேஷ் கான் இடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement