எனக்கே முதல்நாள் நைட் தான் தெரியும் – பிசிசிஐ தலைவரான ஸ்வாரஸ்ய கதையை பகிரும் ரோஜர் பின்னி

Roger-Binny
- Advertisement -

இந்தியாவில் இன்று நம்பர் ஒன் விளையாட்டாக உயர்ந்து கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமாக ஈட்டுவதால் சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசியை மிஞ்சி உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 36ஆவது தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி பொறுப்பேற்றுள்ளார். இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற 91வது வருடாந்திர கூட்டத்தில் 2019 முதல் தலைவராக இருந்து வந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவிக்காலம் முடிந்து வெளியேறியதை அடுத்து 36ஆவது புதிய தலைவராக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Roger Binny Sourav Ganguly

- Advertisement -

கடந்த 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் ஏற்கனவே கர்நாடக வாரியத்தின் தலைவராக செயல்பட்ட நிலையில் தற்போது பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுள்ளது நிறைய பேருக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது. ஏனெனில் பிசிசிஐ நிர்வாகிகளின் பதவிகாலம் பற்றி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் இறுதியில் சாதகமான தீர்ப்பு வந்ததால் சவுரவ் கங்குலி மீண்டும் அடுத்த 3 வருடங்களுக்கு தலைவராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அரசியல் தலையீட்டால் சௌரவ் கங்குலி வெளியேறும் நிலை ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதனாலேயே கடைசி நேரத்தில் இதர நிர்வாகிகள் ஆதரவுடன் ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தெரிய வந்தது.

முதல்நாள் இரவு:
இந்நிலையில் பிசிசிஐ அமைப்பில் ஏதேனும் ஒரு சாதாரண பொறுப்பு மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாக தெரிவிக்கும் ரோஜர் பின்னி தலைவர் பதவி கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார். சொல்லப்போனால் முதலில் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்று கூறும் அவர் தலைவர் பதவியை தேர்ந்தெடுக்கும் நாளின் முந்தைய நாள் இரவு தான் தம்மை அந்த பதவிக்கு போட்டியிட விண்ணப்பிக்குமாறு ஆதரவுகள் வந்ததாக கூறியுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த தாம் ஒருநாள் முழுவதும் யோசித்து அதற்கு சம்மதம் சொன்னதாகவும் தெரிவிக்கிறார்.

Roger Binny

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தேர்தலுக்கு என்னை போட்டியிடுமாறு ஆதரவுகள் வந்த போது நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும் என்று காத்திருந்த நான் தலைவர் பதவியை எதிர்பார்க்கவில்லை. அதிலும் முதல் நாள் இரவு நீங்கள் தான் அடுத்த தலைவராக போகிறீர்கள் என்று சொன்ன போது ஆச்சரியத்தில் உறைந்த எனக்கு அதிலிருந்து வெளிவர அன்றைய நாள் இரவு முழுவதும் தேவைப்பட்டது”

- Advertisement -

“மேலும் ஏற்கனவே கடந்த 5 தசாப்தங்களாக நான் கிரிக்கெட் சம்பந்தமாக பல்வேறு துறைகளில் செயல்பட்டுள்ளதால் இந்த பதவியில் எனக்கு சவால் எதுவும் கிடையாது. பொதுவாகவே நான் சவால்களை விரும்புவேன் என்பதால் இந்தப் பதவியிலும் மகிழ்ச்சியுடன் செயல்பட போகிறேன். அந்த வகையில் இதுவும் ஒரு சவால் தான். அத்துடன் இத்தனை நாள் கிரிக்கெட்டில் நான் பெற்ற அனுபவத்தை இந்த பதவியில் பயன்படுத்த உள்ளேன்”

Roger Binny 1

“இதற்கு முன்பாக இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் பயணித்துள்ளதால் எந்தெந்த துறைகளில் நாம் தடுமாறுகிறோம் என்னென்ன அம்சங்களில் முன்னேற்றங்கள் செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். இந்த பதவியில் நான் 3 வருடங்கள் செயல்பட வேண்டியுள்ள நிலையில் அனைத்தையும் சுமூகமாக நடத்தி அடுத்து வரும் தலைவருக்கு சிரமம் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி செல்ல விரும்புகிறேன்” என்று கூறினார். அதாவது ஏற்கனவே கடந்த 50 வருடங்களாக கிரிக்கெட்டில் விளையாடி கிரிக்கெட் வாரியங்களில் வேலை செய்த அனுபவம் உள்ளதால் பிசிசிஐ தலைவர் பதவி தமக்கு பெரிய சவாலாக இருக்காது என்று ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் கடைசி நேரத்தில் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த ரோஜர் பின்னி அவரைப் போன்ற முக்கிய வீரர்கள் அடிக்கடி காயமடைவது ஏன் என்பதை கண்டறிந்து அதை தீர்ப்பதே தம்முடைய முதல் வேலை என்று கூறினார். அத்துடன் வெளிநாடுகளில் வெற்றிகளை குவிக்கும் வகையில் இந்தியாவில் இருக்கும் பிட்ச்களை உயிர்ப்பித்து தரம் உயர்த்துவதற்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement