அவங்க பேச்சை பொய்யாகிட்டேன்.. இந்தியாவை தோற்கடித்ததை மறக்க முடியாது.. ஆட்டநாயகன் ஜோர்சி பேட்டி

Tony Zorzi
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் டிசம்பர் 19ஆம் தேதி போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியாவை பதிலுக்கு 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா 1 – 1* (3) கணக்கில் தொடரை சமன் செய்து அவ்வளவு எளிதாக எங்களை வீழ்த்த முடியாது என்பதை காண்பித்துள்ளது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 212 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 56, தமிழக வீரர் சாய் சுதர்சன் 62 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர் 3 விக்கெட்களை சாய்த்தார்.

- Advertisement -

மறக்க முடியாத சதம்:
அதை தொடர்ந்து சேசிங் செய்த தென்னாப்பிரிக்காவுக்கு துவக்க வீரர் டோனி டீ ஜோர்சி தன்னுடைய முதல் சதமடித்து 119* ரன்களும் ரீசா ஹென்றிக்ஸ் 52 ரன்களும் வேன் டெர் டுஷன் 36 ரன்களும் எடுத்து 42.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் தோல்வியை சந்தித்த இந்தியா இத்தொடரை வெல்ல கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த வெற்றிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் தம்முடைய முதல் சதமடித்து அசத்திய இளம் தென்னாப்பிரிக்க வீரர் டோனி டீ ஜோர்சி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் தம்மால் சர்வதேச அளவில் அசத்த முடியாது என்று விமர்சித்தவர்களின் கருத்தை பொய்யாக்கி இந்தியாவை தோற்கடித்ததை மறக்க முடியாது என்று கூறும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “உண்மையாக இந்த சமயத்தில் வெள்ளம் போல உணர்ச்சிகள் வருகிறது”

- Advertisement -

“இந்த சமயத்தில் முதலாவதாக என்னுடைய அம்மாவை பற்றி நினைக்கிறேன். அவர் வேலைக்கு சென்று விட்டு இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பார். எனது திறமை பற்றி நிறைய பேர் சந்தேகப்பட்டார்கள். அவர்களை தற்போது பொய்யாக்கியதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். பயிற்சியாளர்கள் ராப் மற்றும் ஜேபி டுமினி ஆகியோர் டாப் ஆர்டரில் நான் எப்படி விளையாட வேண்டும் என்று எதிர்பார்ப்பதை என்னிடம் சொன்னார்கள்”

இதையும் படிங்க: போராடிய சுதர்சன், ராகுல்.. அசத்திய டோனி.. திருப்பி அடித்த தெ.ஆ.. இந்தியா தோற்றது எப்படி?

“முதல் போட்டியிலும் இதே போல சிறப்பாக விளையாட விரும்பினேன். தற்போது நான் பல்வேறு சூழ்நிலைகளில் என்னை உட்படுத்திக் கொள்ள துவங்கி விட்டேன் என்று நினைக்கிறேன். இப்போதும் நான் என்னுடைய ஆட்டத்தில் சில முன்னேற்றங்களை காண வேண்டும். இந்தியாவுக்கு எதிராக சதமடித்த இந்தப் போட்டியில் மைதானத்தில் இருந்த அனைவரும் எனக்கு கை தட்டினார்கள். இது போன்ற தருணத்தை மறக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement