ஐபிஎல் சாம்பியன் யார்..! மீண்டும் ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் சிஎஸ்கே..! விவரம் உள்ளே

final
- Advertisement -

11 வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று(மே27) நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சனின் ஹைதராபாத் அணியும் பல பரிட்சை செய்யபோகும் இந்த போட்டியில் வெற்றிபெற போவது யார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
IPL 2018 - SRH vs CSK

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு ஐபிஎல் தொடரில் பங்குபெற்ற தோனி தலைமையிலான சென்னை அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை நடந்து முடிந்த அணைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிலே ஆப் சுற்றிற்க்கு தகுதி பெற்ற ஒரே அணி என்றால் அது சென்னை அணி மட்டும் தான். இதுவரை 4 முறை இறுதி போட்டிக்கு நுழைந்துள்ள சென்னை அணி 2 முறை பட்டத்தையும் வென்றுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இறுதி போட்டிக்கான தனது முதல் தகுதி சுற்று போட்டியில் சென்னையுடன் விளையாடிய ஹைதராபாத் அணி தோல்வியடைந்தது. பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை(மே25) அன்று நடந்த இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதுவரை நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்களில் ஹைத்ராபாத் அணி ஒரே ஒரு முறை மட்டுமே இறுதி போட்டிக்கு நுழைந்து கோப்பையை வென்றுள்ளது.

மேலும்,இன்று இறுதி போட்டி நடக்கவிருக்கும் மும்பை வாங்கடே மைதானம் பேட்டிங் மட்டும் பந்து வீச்சிற்கு சாதகமான பிட்சை கொண்ட ஒரு மைத்தனமாகும். 6 பேட்ஸ்மேன்களை கொண்ட சென்னை அணி இதனை சாதகமாக பயன்படுத்துமா,இல்லை முதல் தகுதி சுற்றில் தன்னை தோற்கடித்த சென்னை அணியை ப
ழிதீர்க்குமா ஹைதராபாத் அணி என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி சென்னை அணியுடம் 3 போட்டிகளில் விளையடியுள்ளது. ஆனால் ஒரு போட்டியில் கூட ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement