இந்திய அணியில் இவரை தேர்வுசெய்யாதது இந்திய அணிக்குத்தான் பெரும் இழப்பு – டாம் மூடி வெளிப்படை

13வது ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துவிட்டது. பெரும் விறுவிறுப்பு இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்று விட்டது. அந்த அணிக்கு இது ஐந்தாவது கோப்பையாகும். எந்த வருடமும் போல் இல்லாமல் இந்த வருடம் நட்சத்திர வீரர்கள் தவிர பல இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர்.

mi

குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி ஆடினார். இந்த வருடம் 15 போட்டிகளில் விளையாடி 480 ரன்கள் குவித்திருக்கிறார். இதன் ஸ்ட்ரைக் ரேட் 145 மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 3 ஆண்டுகள் விளையாடியவர்.

அதன் பின்னர்தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது அந்த அணியின் பேட்டிங் தூணாக இருக்கிறார். இப்படி ஆடும் இவர் இந்திய அணியில் இடம் பிடித்தார் விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இவரது பெயர் இல்லை.

sky

இந்த வருடம் மிகவும் நன்றாக விளையாடி வருன் சக்கரவர்த்தி, தங்கராசு நடராஜன் போன்ற இளம் வீரர்களுக்கு உடனடியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவிற்கு இடம் கிடைக்கவில்லை என்பது பல ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் ஏக்கமாக இருக்கிறது.

- Advertisement -

sky 2

இந்நிலையில் இது குறித்து பேசிய ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி கூறியதாவது : சூர்யகுமார் யாதவ் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவரது ஆட்டம் நேர்த்தியான ஆட்டமாக இருக்கிறது. பொறுப்புடனும் ஆடத் தொடங்கி விட்டார். இவரை போன்ற ஒரு வீரர் இந்திய அணியில் இல்லாததை இந்திய அணிக்கு தான் இழப்பு என்று தெரிவித்திருக்கிறார் டாம் மூடி.