இந்த வருட பெஸ்ட் ஐ.பி.எல் லெவன் அணியை தேர்வு செய்த டாம் மூடி – ரொம்ப வித்தியாசம் தான்

51 நாட்களாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெற்ற ஐபிஎல் போட்டி இன்றுடன் முடிவடையப் போகிறது. ஐபிஎல் தொடர் இந்த முறை நடக்கவே நடக்காது என்று இந்த நிலையில் ஒருவழியாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது . இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் இன்று இரவு மோத போகின்றனர். அத்துடன் இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் இனிதே முடிவடைகிறது.

dcvsmi

வழக்கத்திற்கு மாறாக இந்த வருட ஐபிஎல் தொடரில் பல இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார். அவர்களது பெயரை சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி நன்றாக விளையாடி வருன் சக்கரவர்த்தி, தங்கராசு நடராஜன் போன்ற இளம் வீரர்கள் இந்திய அணியில் வாய்ப்பும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரின் கனவு அணியை வெளியிட்டிருக்கிறார்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி அவரது அணியில் நாம் எதிர்பார்த்த பல வீரர்கள் இருக்கின்றனர்.ஆனால் இளம் வீரகளுக்குப் பெரிதாக இடமில்லை. தொடக்க வீரர்களாக அவரது அணியில் டெல்லி அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், பஞ்சாப் அணியின் கேப்டனுமான கேஎல் ராகுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்திற்கு விராட் கோலி தெரிவு செய்யப்படவில்லை.

SKY

ஆச்சரியமாக அந்த இடத்தில் மும்பை அணியின் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நான்காவது இடத்திற்கு பெங்களூரு அணியின் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் வருகிறார். அதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி காட்டி கொண்டிருந்த இஷான் கிஷான் வருகிறார்.

- Advertisement -

ஆச்சரியமாக ஒரு சில போட்டிகளில் நன்றாக ஆடிய ராகுல் தெவாட்டியா இடம் பிடித்திருக்கிறார். சுழற்பந்து வீச்சாளராக ரஷித் கான் ஆகியோர் வருகிறார்கள். வேகப்பந்து வீச்சாளராக மிகச் சிறந்த மூன்று பேரை தேர்வு செய்து இருக்கிறார் டாம் மூடி. ஜஸ்பிரித் பும்ரா, ககிசோ ரபடா, ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இந்த அணியில் இடம் பிடித்திருக்கின்றனர்.

Tewatia

டாம் மூடி வெளியிட்டுள்ள ஐபிஎல் கனவு அணி :-

1. தவான், 2. கேஎல் ராகுல், 3. சூர்யகுமார் யாதவ், 4. ஏபிடி, 5. இஷான் கிஷன், 6. ராகுல் டெவாட்டியா, 7. ரஷித் கான், 8. ஜாஃப்ரா ஆர்சர், 9. ரபடா, 10. சாஹல், 11. பும்ரா.