இன்னும் 5 வருஷத்துல கோலியை விட இவரு பெரிய பேட்ஸ்மேனா வருவாரு ? – டாம் மூடி கணிப்பு

- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்து அபாரமாக செயல்பட்டு அதன் பின்னர் இந்திய அணியில் இடம் பிடித்தவர். அவர் தற்போது உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகவும் மிகச்சிறந்த கேப்டனாகவும் இருக்கிறார். அவர் ஆடத் துவங்கியதில் இருந்து பல்வேறு வீரரை அவருடன் ஓப்பிட்டு வருகின்றனர். ஸ்டீவன் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் என பலரும் அவருடன் ஒப்பிடபட்டனர்.

Kohli 3

- Advertisement -

இருந்தாலும் தற்போது வரை அவர்தான் கிரிக்கெட் உலகின் ராஜாவாக இருந்து வருகிறார். இந்நிலையில், மேலும் ஒரு வீரரை அவ்வாறு ஒப்பிட்டு வருகின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். பாகிஸ்தானைச் சேர்ந்த 25 வயதான பாபர் அசாம்தான் அந்த வீரர். பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகம் ஆனவர் பாபர் அசாம்.

பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானத்தில் இருந்து தற்போது வரை தனது அசத்தலாக ஆட்டத்தினால் அவர் அனைவரையும் கவர்ந்து வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்கள் 13 அரை சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 54.0 சராசரியும் டி20 கிரிக்கெட்டில் 50.54 சராசரியும் வைத்துள்ளார்.

Azam

தொடர்ச்சியாக நன்றாக ஆடி வரும் இவர் சீக்கிரம் விராட் கோலியை முந்தி விடுவார் என்று பிரபல பயிற்சியாளர் டாம் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்.: பாபர் அசாம் கடந்த சில வருடங்களில் மிகச்சிறந்த வீரராக உருவாகியுள்ளார். விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் தான். ஆனால் பொறுத்திருந்து பாருங்கள், இன்னும் ஐந்து முதல் பத்து வருடத்தில் அவருடைய இடத்திற்கு மிக அருகில் வந்து விடுவார் பாபர் அசாம்.

- Advertisement -

இவரிடம் சிறப்பான ஒரு திறமை இருக்கிறது. வெளிநாடுகளிலும் சிறப்பாக ஆடப் போகிறார். தற்போது வரை வெறும் 26 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் பொறுத்திருந்து பாருங்கள் இவர் மிகச்சிறந்த வீரராக வருவார் என்று கூறியுள்ளார் தாம் மூடி. அவரின் இந்த கருத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கோலி தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். அவரைப்போன்று இவரால் தெடர்ந்து ஆடமுடியுமா ? என்பதும் அவருக்கு காயமின்றி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா என்பதை பொறுத்தே பாபர் அசாமின் சாதனை அமையும் என்பதும் குறிபிடத்தக்கது.

Advertisement