உலகின் தற்போதைய பெஸ்ட் லெவன் டி20 அணி இதுதான். 3 இந்திய வீரர்கள் தேர்வு – டாம் மூடி தேர்வு செய்த அணி

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் வீரராகவும் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருப்பவர் டாம் மூடி இவரது தலைமையில்தான் 2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வென்றது. மிகச் சிறந்த பயிற்சியாளர் என்றும் பெயர் பெற்றவர். இவர் தற்காலத்தில் உள்ள வீரர்களை வைத்து சிறந்த டி20 அணியை தேர்வு செய்துள்ளார்.

moody

- Advertisement -

இவரது அணியில் புதிய வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. விக்கெட் கீப்பராக தோனியை இவர் தேர்வு செய்யவில்லை. அதேபோல் ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா அணியில் இல்லை. இந்தியாவில் இருந்து மொத்தம் மூன்று வீரர்கள் மட்டுமே இருக்கின்றனர். துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இருக்கின்றனர். கேப்டனாகவும் ரோகித் சர்மாவை நியமித்துள்ளார் டாம் மூடி.

மூன்றாவது இடத்திற்கு விராட் கோலியும் நான்காவது இடத்திற்கு ஏபி டிவிலியர்ஸ் இருக்கின்றனர். ஐந்தாவது இடத்திற்கு வித்தியாசமாக ஒரு வீரரை தேர்வு செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரரான நிக்கோலஸ் பூரன் விக்கெட் கீப்பராக 5வது இடத்திலும் விளையாடுகிறார். ஆறாவது இடத்திற்கு ஆண்ட்ரே ரசல் இருக்கிறார்.

Pooran

ஏழாவது இடத்திற்கு சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் 8வது இடத்திற்கு மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஆகியோர் இடம்பெறுகின்றனர். வேகப்பந்து வீச்சாளர்கள் இடதுகை மிச்செல் ஸ்டார்க் வலது கை மற்றும் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்து இங்கிலாந்து அணியின் ஆர்ச்சரும் இடம்பெற்றுள்ளார்.
.

- Advertisement -

டாம் மூடி அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம் :

Rohith

1. டேவிட் வார்னர், 2. ரோகித் சர்மா (கேப்டன்), 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. நிக்கோலஸ் பூரன், 6. அந்த்ரே ரஸல், 7. சுனில் நரைன், 8. மிட்செல் ஸ்டார்க், 9. ரஷித் கான், 10. பும்ரா, 11. ஜாஃப்ரா ஆர்சர்.

Advertisement