கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் தற்போது அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் செய்வதறியாது வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் நடைபெற அடுத்த சிலமாதங்களுக்கு வாய்ப்பில்லை.
இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நாளை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் என அனைவரும் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைதளம் மூலம் பதிலளித்து வருகின்றனர். அதன்படி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான டாம் மூடியும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.
அதன்படி ரசிகர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் பெயர் தெரியாமல் போன ,குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் யார் என்ற கேள்வியை அவரிடம் எழுப்பினார். அதற்கு பதிலளித்த டாம் மூடி : கடந்த 10 ஆண்டில் பெரிதாக பெயரை சம்பாதிக்காமல், ஆனால் மிகவும் அபார திறமையுடன் இருந்த வீரர் என்றால் எனக்கு நியாபகம் ஒருவர்தான்.
Tell me according to you who is the most underrated cricketer in this decade? #AskTom @TomMoodyCricket
— harsh gupta (@lamesbyharsh) April 4, 2020
அவர் நியூசிலாந்தின் ராஸ் டைலர் இந்த கேள்வியின் பதிலுக்கு பொருத்தமானவர். அவருடைய ஆட்டத்திற்கு ஏற்ப அவருக்கான வெகு பலன்கள் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார் டாம் மூடி. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடியும் அவருக்கு சரியான பெயர் கிடைக்கவில்லை.
அவர் பின்னிலையில் இருக்க நியூசிலாந்து அணி ஏகப்பட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறது. அவரது அதிரடி மூலம் ஏகப்பட்ட வெற்றிகளை நியூசிலாந்து அணிக்கு பெற்று தந்துள்ளார். ஆனால் முக்கியமான போட்டிகளில் அவர் சோபிக்க தவறியதால் அவரின் பெயர் வெளியில் தெரியாமல் போனது.
Ross Taylor doesn’t get the recognition he deserves imo
— Tom Moody (@TomMoodyCricket) April 4, 2020
சமீபத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை வீழ்த்த அவரின் பங்கு அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.