இவர்கள் இருவர்தான் உலகின் தலைசிறந்த டி20 துவக்க வீரர்கள் – டாம் மூடி கணிப்பு

- Advertisement -

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகநாடுகள் மட்டுமின்றி இந்தியாவும் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே சில ஆயிரம் பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த தாக்கத்தின் பாதிப்பினை குறைக்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு நிலையில் உள்ளது.

Corona-1

- Advertisement -

இந்த நேரத்தைப் பயன்படுத்திய கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். இதில் பலரும் ரசிகர்களுக்கு தெரியாத பல விஷயங்களை பரிமாறிக் கொண்டனர். மேலும், அதன்படி தற்போது ஆஸ்திரேலிய அணியின் நமுன்னாள் வீரரும், வர்ணனையாளருமான டாம் மூடியும் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த இருவர் தான் உலகின் தலை சிறந்த துவக்க வீரர்கள் என உலகின் தரம் வாய்ந்த பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளருமான டாம் மூடி சமீபத்தில் ரசிகர்களிடம் டுவிட்டர் வாயிலாக உரையாடிக்கொண்டிருந்தபோது 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த துவக்க வீரர்கள் யார் யார் என்று கேட்டனர்.

moody

அதற்கு அவர் பதிலளித்துதாவது : இது மிகக் கடினமான கேள்வி ஆனால் ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் இந்திய அணியின் ரோஹித் சர்மா ஆகியோரின் பெயர்களை சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் எனவும் பிடித்தமான கேப்டன் மகேந்திர சிங் தோனி எனவும் பதில் கூறினார்.

- Advertisement -

இந்திய அணியில் அவருக்கு பிடித்த வீரர் விராட் கோலி மிகவும் பிடித்த பீல்டர் ரவீந்திர ஜடேஜா என்றும் கூறியுள்ளார். இதுபோன்று பல்வேறு ரசிகர்களின் கேள்விகளுக்கு டாம் மூடி பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

Rohith

warner

தற்போது உள்ள வீரர்களில் வார்னர் மற்றும் ரோஹித் சர்மாதான் சிறந்த வீரர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காகவும், ரோஹித் இந்திய அணிக்காகவும் டி20 போட்டிகளில் துவக்க வீரர்களாக களமிறங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement