ரவி சாஸ்திரியின் பயிற்சியாளர் பதவிக்கு குறிவைத்துள்ள ஆஸி முன்னாள் வீரர் – இவரும் நல்ல கோச் தான்

shastri
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்ததை அடுத்து கேப்டன் விராத் கோலியின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் பயிற்சியாளராக தொடர்ந்த ரவிசாஸ்திரி தற்போது நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருடன் அந்த பதவியில் இருந்து விலக உள்ளார். ரவி சாஸ்திரியின் தலைமையில் இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டு பல தொடர்களை கைப்பற்றியுள்ளது. ஆனாலும் அவரின் தலைமையின் கீழ் ஒரு ஐ.சி.சி கோப்பையை கூட இந்திய அணி கைப்பற்றவில்லை என்ற குறை மட்டுமே இருக்கிறதே தவிர மற்றபடி அவரது பயிற்சியில் எந்த வித குறையும் இல்லை என்று கூறலாம்.

Shastri

- Advertisement -

இந்நிலையில் தான் மீண்டும் பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என ரவிசாஸ்திரி ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்து இருந்ததால் பிசிசிஐ அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் ஈடுபட்டு உள்ளது. அதன்படி ஏற்கனவே பல இந்திய முன்னாள் வீரர்களிடம் பிசிசிஐ பேசி வரும் நிலையில் வெளிநாட்டு பயிற்சியாளர்களும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ரவி சாஸ்திரியின் இடத்தை பிடிக்க தற்போதைய சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளரான டாம் மூடி விரும்புவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய போது பயிற்சியாளராக இருந்த டாம் மூடி தற்போதும் ஐ.பி.எல் அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

moody

இருப்பினும் வெளிநாட்டு பயிற்சியாளரை பிசிசிஐ நியமிக்க விரும்புமா ? என்பது பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். தற்போதைய பிசிசிஐ-யின் தலைவரன கங்குலி வெளிநாட்டு பயிற்சியாளர்களை விட இந்திய முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக மாற்றுவதில் உறுதியாக உள்ளதால் இந்திய அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர்களில் ஒருவரே பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : குவாலிபயர் 1 : இன்றைய போட்டிக்கான சென்னை அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

ஏற்கனவே டிராவிடும் பயிற்சியாளர் பதவி தேவையில்லை என்று கூறியுள்ளதால் கும்ப்ளே மற்றும் லட்சுமணன் ஆகியோரிடமும் பிசிசிஐ பயிற்சியாளர் பதவிக்கான ஆலோசனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருப்பினும் இந்த உலக கோப்பை தொடர் முடிந்த பின்னர் வரும் தென்னாப்பிரிக்க தொடருக்கு இந்திய அணி புதிய பயிற்சியாளருடன் செயல்படும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement