இலக்கு பெரியதாக இருந்தும் எங்களது சிறப்பான வெற்றிக்கு இதுவே காரணம் – நியூசி கேப்டன் மகிழ்ச்சி

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசியது.

iyer

- Advertisement -

அதன்படி 50 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 103 ரன்களும், ராகுல் 88 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கேப்டன் கோலியும் 51 அடிக்க பேட்டிங்கில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது.

அதனைத் தொடர்ந்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூஸிலாந்து சார்பாக ராஸ் டைலர் 84 பந்துகளில் 109 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். மேலும் அந்த அணியின் கேப்டன் லேதம் மற்றும் துவக்க வீரர் ஹென்றி நிகோலஸ் ஆகியோர் அரைசதம் அடித்து வெற்றிக்கு பங்களித்தனர்.

Taylor

இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய அந்த அணியின் தற்போதைய கேப்டன் டாம் லேதம் கூறியதாவது : எங்களது வீரர்கள் நன்றாக ஆடியுள்ளனர். கடினமான இலக்கை எட்டிப்பிடிக்க வீரர்கள் காட்டிய திறன் அற்புதமாக இருந்தது. நாங்கள் பார்ட்னர்ஷிப் வைத்து வெற்றி பெற நினைத்தோம். ஒரு சில பேட்ஸ்மேன்களை வைத்து இவ்வளவு பெரிய இலக்கை எட்டிவிட விடமுடியாது. நாங்கள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே ரன்கள் அடித்திருந்தனர் இந்திய அணியினர்.

Taylor 2

விக்கெட் விட்டுவிடாமல் கையில் வைத்திருந்தோம். மேலும் இடது – வலது பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசுவது சற்று சிரமமாக இருக்கும் என்று நினைத்தோம். ராஸ் டைலர் அபாரமாக ஆடினார். பந்துவீச்சில் இன்னும் முன்னேற்றம் தேவை அதனால் எங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அடுத்த போட்டியில் இன்னும் நன்றாக ஆட முயற்சிப்போம் என்று கூறினார் டாம் லேதம்.

Advertisement