IND vs NZ : எங்க டீம் இப்போவே வீக்கா தாங்க இருக்கு. வெளிப்படையா பயத்தை தெரிவித்த – நியூசி கேப்டன்

Latham
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை அடுத்து தற்போது இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது ஜனவரி 18-ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

- Advertisement -

அதன்படி ஜனவரி 18-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற இருக்கும் இந்த முதலாவது ஒருநாள் போட்டிக்காக ஏற்கனவே இருஅணி வீரர்களும் தற்போது முழு வீச்சில் பயிற்சி மேற்கொண்டு இந்த போட்டியில் பங்கேற்க காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாகவே தங்களது அணியில் பெரிய குறை இருக்கிறது என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : எங்கள் அணியில் இம்முறை டிம் சவுதி, ட்ரென்ட் போல்ட், கேன் வில்லியம்சன், ஜிம்மி நீஷம் ஆகியவர்கள் விளையாட முடியவில்லை.

tom Latham IND vs NZ

எனவே தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே இந்த விடயங்கள் எங்களுக்கு பின்னடைவை தந்துள்ளன. அதேபோன்று இந்திய அணியில் துடிப்பான வீரர்கள் இருப்பதால் அவர்கள் நிச்சயம் கூடுதல் பலத்தை பெற்றுள்ளனர். இருந்தாலும் எங்களிடம் இருக்கும் அனுபவ வீரர்களை வைத்து நாங்கள் இந்திய அணிக்கு சவாலை கொடுப்போம்.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs AUS : இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் வெல்லப்போவது யார் ? – ஆடம் கில்கிறிஸ்ட் கணிப்பு

இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எளிது கிடையாது என்றாலும் இறுதிவரை நாங்கள் போராட்டத்தை கொடுப்போம் என போட்டி துவங்குவதற்கு முன்னதாகவே தங்களது பயத்தை நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement