IND vs AUS : இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் வெல்லப்போவது யார் ? – ஆடம் கில்கிறிஸ்ட் கணிப்பு

Gilchrist
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி மாதம் முதல் நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது நெருங்கி வரும் வேளையில் இந்த தொடரானது இரு அணிகளுக்குமே முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என்பதனால் இந்த தொடரானது இரண்டு அணிகளுக்குமே மிக முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்பட்டு வருகிறது.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எந்த அணி கைப்பற்றும் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் தற்போதே எழுந்துள்ளன. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஆடம் கில்கிரிஸ்ட் இந்திய அணியை ஆஸ்திரேலிய வீழ்த்த வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது மனம் திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியை 18 வருடங்களுக்குப் பிறகு வெல்ல இது ஒரு சிறப்பான தருணம். உங்கள் பெருமையாக எல்லாம் மூட்டைகட்டி கொள்ளுங்கள். ஏனெனில் இந்திய அணியை நாம் அவர்களது மண்ணில் வீழ்த்தி 18 ஆண்டுகள் ஆகிவிட்டது.

indvsaus

இம்முறை இந்தியாவை அவர்களது மண்ணில் வீழ்த்த வேண்டுமெனில் நிச்சயம் ஆஸ்திரேலியா வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டு தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை இங்கு உள்ள மைதானங்களில் நிறுத்துவது என்பது மிகப்பெரிய சவாலான விடயம். அந்த வகையில் நல்ல தரமான பந்துவீச்சாளர்களை வைத்துதான் இந்திய அணியை இங்கு வீழ்த்த முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs NZ : இஷான் கிஷன் ஓப்பனிங் ஆட மாட்டாரு. அவரோட பொசிஷன் இதுதான் – ரோஹித் சர்மா அறிவிப்பு

எனவே பழைய பெருமை எல்லாம் பேசாமல் சரியான பந்துவீச்சாளர்களை கலவையாகக் கொண்டு வந்து சிறப்பான அணியுடன் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்த முடியும். இல்லையெனில் இம்முறையும் ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய அணி தங்களது மண்ணில் மிகப்பெரிய சவாலை தருவார்கள் என்று கில்கிறிஸ்ட் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement