இந்த வெற்றி போதாது. அடுத்து இதுவும் நடந்தாதான் எனக்கு சந்தோசம் – நியூசி கேப்டன் ஆவேச பேட்டி – INDvsNZ

Latham
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் குப்தில் 79 ரன்களும், டைலர் 73 ரன்களும் அடித்தது குறிப்பிடத்தக்கது.

guptill

- Advertisement -

அதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டி முடிந்து வெற்றி பெற்றது குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் கூறியதாவது : இது ஒரு அற்புதமான வெற்றி ஆகும். கடந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் வெற்றி பெற்றுக் கொடுத்தனர். இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பேட்டிங் துவங்கும் போதே சில விக்கெட்டுகளை எடுத்து விட்டால் நாம் எப்போதும் அந்த ஆட்டத்தில் வெற்றியை நோக்கி செல்லலாம்.

NZ

இறுதியில் எங்களுக்கு கிடைத்த பேட்டிங் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை மாற்றிவிட்டது. கடைசி விக்கெட் விழும் வரை எனக்கு வெற்றியின் மீது நம்பிக்கை இல்லை. அவ்வப்போது பந்து வீச்சாளர்களிடம் மாற்றுவதற்கும் அதுவே காரணம். இன்று அறிமுக போட்டியில் ஆடிய கைல் ஜேமிசன் முதல் போட்டியில் அற்புதமாக ஆடிவிட்டார். அடுத்த போட்டியிலும் ஜெயித்து தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்வோம் என்று டாம் லேதம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement