IND vs NZ : 385 ரன்னை சேசிங் பண்ணியிருக்க முடியும். ஆனா நாங்க தோக்க இதுதான் காரணம் – டாம் லேதம் பேட்டி

Tom-Latham
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து அணி இந்திய அணியிடம் முழுவதுமாக சரணடைந்துள்ளது. முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்த தொடருக்கு பயணித்த நியூசிலாந்து அணி இந்த மூன்று போட்டியிலும் தோல்வியை சந்தித்தது சற்று வருத்தத்திற்குரிய விடயமாகவே இருக்கிறது.

Shardul Thakur

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா அணியானது 385 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்க அடுத்ததாக 386 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து நியூசிலாந்து அணி சேசிங் செய்தது

பெரிய இலக்கினை துரத்திய நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் 295 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனதால் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் கூறுகையில் :

IND-vs-NZ

நாங்கள் இந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக துவங்கவில்லை. ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரது பார்ட்னர்ஷிப் மிகச் சிறப்பாக இருந்தது. ஆனாலும் இந்திய அணியை 385 ரன்களில் நிறுத்தியது சற்று மகிழ்ச்சியான ஒரு விடயம் தான். அதே போன்று சேசிங்கிலும் நாங்கள் ஒரு நல்ல நிலையில் தான் இருந்தோம்.

- Advertisement -

ஆனால் இடையில் நிறைய விக்கெட்டுகளை இழந்ததாலேயே தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இதுபோன்ற போட்டிகளில் பெரிய பாட்னர்ஷிப் என்பது அவசியமான ஒன்று. அதனை எங்களால் செய்யமுடியாமல் போனது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த தொடர் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியாவில் எங்களுடைய கடைசி அனுபவமாக இருக்கிறது.

இதையும் படிங்க : IND vs NZ : நம்ம டீமோட மேஜிக் மேன் இவர்தான். இவர் விளையாடுனாலே நமக்கு வெற்றி தான் – ரோஹித் புகழாரம்

எனவே இந்தியாவில் எப்படி விளையாட வேண்டும் என்ற நல்ல ஐடியா எங்களுக்கு கிடைத்துள்ளது. உலகக்கோப்பை தொடரின் போது பின்வரிசை வரை நன்றாக விளையாட வேண்டும் என்ற ஐடியா இந்த தொடரில் கிடைத்துள்ளது. நிச்சயம் இந்த அனுபவம் அனைவருக்கும் உதவி இருக்கும் என்று நினைக்கிறேன். இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து தான் நாம் பல விடயங்களை கற்றுக் கொள்ள முடியும் என டாம் லேதம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement