IND vs NZ : நம்ம டீமோட மேஜிக் மேன் இவர்தான். இவர் விளையாடுனாலே நமக்கு வெற்றி தான் – ரோஹித் புகழாரம்

Rohit-Sharma
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா அணியானது 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் குவித்தது.

Suryakumar rohit sharma

இந்திய அணி சார்பாக துவக்க வீரர்கள் ரோகித் சர்மா(101) மற்றும் சுப்மன் கில்(112) இருவரும் சதமடித்து அசத்தினர். அதனை தொடர்ந்து 386 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் மட்டுமே குவித்ததனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

கடந்த ஆறு போட்டிகளாக நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளதாக நினைக்கிறோம். 50 ஓவர் போட்டிகளை பொருத்தவரை இப்படி நிலையான வெளிப்பாட்டை தொடர்ச்சியாக வெளிப்படுத்துவது முக்கியமான ஒன்று. அந்த வகையில் நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். சிராஜ் மற்றும் ஷமி ஆகியோர் இல்லாத வேளையில் பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க நினைத்தேன். அந்த வகையில் தான் உம்ரான் மாலிக் மற்றும் சாஹல் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டது.

Shardul Thakur

அழுத்தமான சூழ்நிலைகளில் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்று எதிர்பார்த்த வேளையில் அவர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். நாம் முதலில் பெரிய ரன்களை குவித்து விட்டோம் அதனால் இங்கு பவுலிங் எளிதாகிவிட்டது என்று கூற முடியாது. ஏனெனில் இந்த மைதானத்தில் எந்த இலக்கும் நமக்கு பாதுகாப்பான ஒன்றாக இருக்காது. இந்திய அணி மிகச் சிறப்பாக பவுலிங் செய்திருக்கிறது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஷர்துல் தாகூர் நமது அணியில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அணியில் உள்ள மற்ற வீரர்களும் அவரை மேஜிசியன் என்று அழைப்பார்கள். ஏனெனில் எப்போது அவர் வந்தாலும் விக்கெட் விழுவது உறுதி வெற்றியும் உறுதி இன்னும் அவருக்கு பல போட்டிகளை நாங்கள் வழங்க உள்ளோம். அதேபோன்று குல்தீப் யாதவும் எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ அப்போதெல்லாம் வந்து விக்கெட் எடுத்து ஆட்டத்தை மாற்றிக் கொடுக்கிறார் என்று ரோகித் சர்மா புகழாரம் சூட்டினார்.

இதையும் படிங்க : விராட் கோலியின் வரலாற்று சாதனையை உடைத்த சுப்மன் கில் – பாபர் அசாமின் உலக சாதனையை சமன் செய்து அபாரம்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சுப்மன் கில் தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவர் புதிதாக ஆரம்பித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு இளம் வீரராக அணிக்குள் வந்து இப்படி முதிர்ச்சியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவது அபாரமாக இருக்கிறது என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement