நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது. அத்துடன் முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் முழுமையான ஒய்ட்வாஷ் தோல்வியையும் இந்தியா பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அத்தொடரில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் சொந்த மண்ணிலேயே மண்ணைக் கவ்விய இந்தியா சவாலான ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெறாது என்று ரசிகர்கள் கருதுகிறார்கள். அதனால் ஆஸ்திரேலியாவில் கண்டிப்பாக இந்திய அணி தோற்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
இந்தியா மோசமாகி விடல:
இந்நிலையில் கடந்த மாதம் இலங்கையில் 2 – 0 (2) என்ற கணக்கில் நியூசிலாந்து படுதோல்வியை சந்தித்தது. ஆனால் அங்கிருந்து 3 – 0 என்ற கணக்கில் வென்றதைப் போல இந்திய அணியும் ஆஸ்திரேலியாவில் கம்பேக் கொடுத்து தொடரை வெல்ல வாய்ப்புள்ளது என நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இந்திய கிரிக்கெட் உண்மையில் ஸ்பெஷலானது. அவர்களுக்கு எதிராக நாங்கள் நிறைய விளையாடியுள்ளோம். அவர்களுடன் எங்கள் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார்கள். அவர்கள் தற்போது தோல்வியை சந்தித்துள்ளார்கள். ஆனால் இப்போதும் அவர்கள் நல்ல தரமான அணி. அவர்கள் ஒரே நாள் இரவில் மோசமாக அணியாகி விடவில்லை”
இந்தியா கம்பேக் கொடுக்கும்:
“எனவே சரியான நேரத்தில் அவர்கள் சரியான விஷயங்களை திருப்புவார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். சில வாரங்களுக்கு முன்பாக நாங்கள் இலங்கையில் இருந்த போது விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக செல்லவில்லை. ஆனால் அங்கிருந்து வந்து இந்தியாவில் வென்ற நேரங்கள் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். குறிப்பாக இதற்கு முன் சாதிக்காததை நீங்கள் சாதித்தது ஸ்பெஷலான விஷயம்” என்று கூறினார்
இதையும் படிங்க: 24/4 டூ 263.. கேப்டனிடம் சண்டையிட்டு வெளியேறிய ஜோசப்.. 10 விளையாடி இங்கிலாந்தை வீழ்த்திய வெ.இ
அவர் கூறுவது போல முதலில் 12 வருடங்கள் சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காத அளவுக்கு இந்தியா மிகவும் வலுவான அணியாகவே இருக்கிறது. ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் தசாப்தம் கழித்து இந்தியா ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. எனவே இப்போதும் திறமைக்கு பஞ்சம் இல்லாத இந்திய அணி ஆஸ்திரேலியா உட்பட வருங்கால தொடர்களில் வெல்லும் என்று உறுதியாக நம்பலாம்.