இந்தியாவுக்கு எதிராக தன்னுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 36 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. அதே வேகத்துடன் இரண்டாவது போட்டியிலும் அபாரமாக விளையாடிய நியூசிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ளது.
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்திய மண்ணில் வெற்றியைப் பெற்று நியூசிலாந்து வரலாறு படைத்துள்ளது. 1955 முதல் இந்தியாவில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்த அந்த அணி தற்போது வெற்றி கண்டுள்ளது. முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா பின்னர் 462 ரன்கள் குவித்தும் வெற்றி காண முடியவில்லை.
இந்தியாவின் தவறு:
அதே போல இரண்டாவது போட்டியில் 156க்கு அவுட்டான இந்தியா பின்னர் 245 ரன்கள் குவித்து போராடியும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. ஆனால் அந்த தவறை செய்யாமல் 2 போட்டிகளிலும் முதல் இன்னிங்ஸில் தாங்கள் பெரிய ரன்கள் குவித்ததே வெற்றிக்கு முக்கிய காரணமானதாக நியூஸிலாந்து கேப்டன் டாம் லாதம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“மிகவும் ஸ்பெஷலாக உணர்கிறோம். இந்த இடத்தில் இருப்பதற்கு பெருமைப்படுகிறோம். களத்தில் அணிக்காக விளையாடும் ஒவ்வொருவரும் அசத்தினால் வெற்றி பெற முடியும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவுக்கு நீங்கள் வரும் போது உங்களுடைய காலை சிறப்பாக முன்னோக்கி வைக்க வேண்டும். ஆரம்பத்திலேயே ரன்களை ஸ்கோர் போர்டில் போடுவது மிகவும் முக்கியம்”
நியூஸிலாந்தின் சரித்திர வெற்றி:
“மிட்சேல் சான்ட்னர் பற்றி குறிப்பிட வேண்டும். அவர் அற்புதமாக செயல்பட்டார். எங்களுடைய அணியில் நீண்ட காலமாக இருக்கும் அவர் ஒரு வழியாக இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார் அவருக்கு பாராட்டுக்கள். இந்தியாவில் வெற்றி என்பது உங்களுடைய அடிப்படை திறமைகளை பின்பற்றி நீண்ட நேரம் விளையாடுவதை பொறுத்ததாகும்”
இதையும் படிங்க: அதைப் பற்றி இப்போவே பேசி காயத்தில் உப்பை போடாதீங்க வலிக்குது.. இந்தியா வரும்.. ரோஹித் வேதனை
“2 மைதானங்களும் வித்தியாசமாக இருந்தன. அதற்கு எங்களை நாங்கள் வேகமாக உட்படுத்திக் கொண்டு கால்களை முன்னோக்கி வைத்தது அற்புதமானது. இந்த தோல்விகளுக்காக இந்தியா இவ்வளவு சூடாக திரும்பி வருவார்கள் என்று நாங்கள் உணரவில்லை. ஆனால் நாங்கள் தேவைப்படும் நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினோம்” என்று கூறினார். மறுபுறம் 2012க்குப்பின் 12 வருடங்கள் கழித்து இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் தோல்வியை சந்தித்து தலை குனிந்துள்ளது.



