அதைப் பற்றி இப்போவே பேசி காயத்தில் உப்பை போடாதீங்க வலிக்குது.. இந்தியா வரும்.. ரோஹித் வேதனை 

Rohit Sharma 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து தோற்றுள்ளது. அதனால் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் இந்தியா முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது.

அது போக நியூஸிலாந்துக்கு முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் இந்தியா வரலாறு காணாத தோல்வியையும் சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களால் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா 2வது போட்டியில் 156க்கு சுருண்டது 2வது இன்னிங்ஸில் போராடியும் வெற்றியைக் கொடுக்கவில்லை.

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பு:

இந்த வரலாற்றுத் தோல்வியால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்பு நெருக்கடியாக மாறியுள்ளது. குறிப்பாக அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடர் உட்பட அடுத்த 6 போட்டிகளில் 4இல் வென்றால் மட்டுமே இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் பற்றி இப்போதே பேசி தம்முடைய தம்முடைய தோல்விக் காயத்தில் உப்பை போடாதீர்கள் என்ற வகையில் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

மேலும் இந்தியா ஃபைனலுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி இப்போதே சிந்திப்பது அதிகப்படியானது. ஏனெனில் தற்போதைய தோல்வியால் நான் காயமடைந்துள்ளேன் என்று மட்டுமே சொல்ல முடியும். எங்களுக்கு முன்னே என்ன இருக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க முடியாது”

- Advertisement -

ரோஹித் வேதனை:

“எங்களுடைய வாய்ப்புகள் குறையட்டும். கடந்த 2 போட்டிகளில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்பது வலிக்கிறது. அணியாக நாங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. இது அணியாக நாங்கள் சுமாராக விளையாடியதால் கிடைத்த தோல்வி. குறிப்பிட்ட விஷயத்தால் கிடைத்தது அல்ல. ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்லும் போது அனைவரும் பாராட்டுக்கு தகுதியானவர்கள்”

இதையும் படிங்க: 12 வருஷமா இந்தியா ஜெய்க்க காரணமான அந்த 2 பேரையா குறை சொல்றிங்க? கேப்டன் ரோஹித் பதிலடி

“அதே போல நீங்கள் தோல்வியை சந்திக்கும் போது அனைவரும் அதற்கான பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார். இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும். பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் 3 அல்லது 4 வெற்றிகளை பெற்றால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தொடர்ந்து 3வது முறையாக இந்தியா தகுதி பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement