12 வருஷமா இந்தியா ஜெய்க்க காரணமான அந்த 2 பேரையா குறை சொல்றிங்க? கேப்டன் ரோஹித் பதிலடி

Rohit Sharma 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்திடம் தோற்றது. இரண்டாவது போட்டியில் அதை விட மோசமாக விளையாடிய இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா அவமானத் தோல்வியை சந்தித்தது. அத்துடன் 2012க்குப்பின் 12 வருடங்கள் கழித்து முதல் முறையாக தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதே முக்கிய காரணமானது.

- Advertisement -

12 வருட வெற்றிக்கு:

குறிப்பாக முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 46க்கு ஆல் அவுட்டாகும் அளவுக்கு சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள் இரண்டாவது போட்டியில் 156க்கு ஆல் அவுட்டாக முக்கிய காரணமானார்கள். அதனால் பவுலர்கள் முடிந்தளவுக்கு போராடியும் இந்திய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. அதே சமயம் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் புனேவில் சுழலுக்கு சாதகமாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மறுபுறம் இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் 11 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதனால் 36 வயதை தாண்டிய அஸ்வின், ஜடேஜாவின் நேரம் முடிந்து விட்டதால் அவர்களை நீக்கலாம் என்ற ஒரு விமர்சனமும் எழுந்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா கொடுத்த பதிலடி பின்வருமாறு. “இப்படி விமர்சிப்பது நியாயம் என்று நான் நினைக்கவில்லை”

- Advertisement -

நியாயமற்ற குறை:

“டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு அனைவரும் பொறுப்புடன் விளையாட வேண்டும். சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்கள் 18 தொடர்களில் தொடர்ந்து வெற்றி பெற உதவிய 2 வீரர்களால் மட்டும் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது. எனவே அந்த இருவரை நான் அதிகமாக பார்க்கப் போவதில்லை. சில நேரங்களில் அவர்களுக்கும் மோசமான போட்டிகள் இருக்க அனுமதிக்க வேண்டும். அப்போது மற்ற வீரர்கள் அசத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: லண்டன் போய்டுங்க.. ரிஷப் பண்ட்டை காலி செய்து.. தோல்விக்கு காரணமான கோலி மீது ரசிகர்கள் அதிருப்தி

“அந்த வகையில் அஸ்வின் ஜடேஜா அசத்தாத போது சுந்தர் அல்லது அக்சர் அல்லது குல்தீப் அசத்துவார்கள். எனவே வெற்றி அவர்களின் பகிரப்பட்ட பங்களிப்பால் கிடைக்கும். ஆம் இம்முறை சுந்தர் சிறப்பான போட்டியை கொண்டிருந்தார். ஆனால் நாம் 500 மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களைப் பற்றி பேசுகிறோம். அவர்களுக்கு அந்த விக்கெட்டுகளை எப்படி எடுத்தோம் என்பது தெரியும். கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் அவர்கள் விக்கெட்டுகள் எடுத்து எங்களுக்கு வெற்றியை கொடுத்தனர். எனவே அனைத்து நேரங்களிலும் அவர்கள் விக்கெட்டுகள் எடுப்பார்கள் என்பது எதிர்பார்ப்பது கடினம்” என்று கூறினார்.

Advertisement