லண்டன் போய்டுங்க.. ரிஷப் பண்ட்டை காலி செய்து.. தோல்விக்கு காரணமான கோலி மீது ரசிகர்கள் அதிருப்தி

Virat Kohli 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒரு தொடரில் தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்துள்ளது.

அத்துடன் 2012க்குப்பின் 12 வருடங்கள் கழித்து தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்காதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெரிய ரன்கள் எடுக்காதது தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

சுமாரான கிங் கோலி:

அதிலும் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி இத்தொடரில் பெரியளவில் ஜொலிக்கவில்லை. குறிப்பாக இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருந்த நிலையில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது அஜஸ் படேல் வீசிய 23வது ஓவரின் ஒரு பந்தில் விராட் கோலி வேகமாக சிங்கிள் எடுக்க எதிர்ப்புறம் புதிதாக களமிறங்கியிருந்த ரிஷப் பண்ட்டை அழைத்தார்.

ஆனால் தம்முடைய முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ரிஷப் பண்ட் முதல் போட்டியில் காயத்தை சந்தித்ததால் கீப்பிங் செய்யாமல் பேட்டிங் மட்டுமே செய்தார். அதனால் அவரால் வேகமாக ஓட முடியாது. அதை தெரிந்தும் விராட் கோலி வேகமாக சிங்கிள் எடுக்க அழைத்தார். அதற்காக வேகமாக ஓடிய ரிஷப் பண்ட் 0 ரன்களில் ரன் அவுட்டானது இந்தியாவின் தோல்வியை உறுதியாக்கியது.

- Advertisement -

லண்டனுக்கு போங்க:

இது ஒருபுறமிருக்க கிங் என்று ரசிகர்கள் கொண்டாடும் விராட் கோலி சுழலுக்கு சாதகமான ஆசிய கண்டத்தில் கடந்த 27 டெஸ்ட் இன்னிங்ஸில் 22 முறை ஸ்பின்னர்களுக்கு எதிராக அவுட்டாகியுள்ளார். குறிப்பாக இடது கை ஸ்பின்னர்களுக்கு எதிராக 10 முறை அவுட்டாகியுள்ள அவர் 27.10 என்ற மோசமான சராசரியை கொண்டுள்ளார். ஆனால் அதை சரி செய்ய விராட் கோலி எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

இதையும் படிங்க: 4 மசாத்தில் க்ளோஸ்.. கெளதம் கம்பீர் பயிற்சியாளராக வந்த பின் இந்தியா இழந்த 10 கௌரவ சாதனைகள்

ஏனெனில் சூப்பர்ஸ்டார் வீரராக இருப்பதாக நினைக்கும் அவர் இந்தியாவுக்காக ஒவ்வொரு தொடரிலும் விளையாடியதும் லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜாலியாக இருக்கிறார். துலீப் கோப்பை, ரஞ்சிக் கோப்பை போன்ற எந்த உள்ளூர் தொடர்களிலும் விளையாடி முன்னேறுவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அது கடைசியில் இந்தியாவின் தோல்விகளில் எதிரொலிக்கிறது. அதனால் ஏமாற்றமடையும் இந்திய ரசிகர்கள் அடுத்ததாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் லண்டனுக்கு சென்று விட்டு நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு விளையாட வாருங்கள் என்று விராட் கோலி மீது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement