4 மாசத்தில் க்ளோஸ்.. கெளதம் கம்பீர் பயிற்சியாளராக வந்த பின் இந்தியா இழந்த 10 கௌரவ சாதனைகள்

Gautam Gambhir
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. குறிப்பாக முதல் போட்டியிலேயே இந்தியா 46க்கு ஆல் அவுட்டானது. அதனால் போராடியும் தோற்ற இந்தியா இரண்டாவது போட்டியில் அதை விட மோசமாக விளையாடி 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதற்கு புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக இருப்பதாக ஒரு தரப்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக அனைத்து நேரங்களிலும் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அவருடைய அணுகுமுறையால் இந்தியா தோல்வியை சந்திப்பதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் விடைபெற்ற ராகுல் டிராவிட்டுக்குப் பின் ஜூலை மாதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

- Advertisement -

கம்பீர் வந்ததும் க்ளோஸ்:

அவர் பொறுப்பேற்ற 4 மாதங்களில் இந்தியா சந்தித்த வீழ்ச்சிகளை பற்றி பார்ப்போம்.
1. முதலாவதாக இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியா ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது.
2. அத்தொடரின் 3 போட்டிகளிலும் இந்தியா 30 விக்கெட்டுகளை இழந்தது. அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 30 விக்கெட்டுகளை இழந்தது.

3. 45 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு காலண்டர் (2024) வருடத்தில் இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை.
4. டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக 50க்குல் ஆல் அவுட்டாகி குறைந்தபட்ச ஸ்கோர் (46க்கு ஆல் அவுட்) பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது.

- Advertisement -

ரசிகர்கள் ஏமாற்றம்:

5. 36 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா முதல் முறையாக ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தது.
7. 19 வருடங்கள் கழித்து பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தோல்வியை சந்தித்தது.
8. 1955 முதல் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: வரலாற்று தோல்வியால் பின்னடைவு? 2025 சாம்பியன்ஷிப் ஃபைனல் செல்ல இந்தியா செய்ய வேண்டியது இதோ

அதில் முதல் முறையாக நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் வரலாறு காணாத தோல்வியை இந்தியா சந்தித்துள்ளது.
9. 2012க்குப்பின் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது.
10. 2012க்குப்பின் 12 வருடங்கள் கழித்து தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

Advertisement