வரலாற்று தோல்வியால் பின்னடைவு? 2025 சாம்பியன்ஷிப் ஃபைனல் செல்ல இந்தியா செய்ய வேண்டியது இதோ

WTC Table
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 36 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் புனேவில் இரண்டாவது போட்டியில் இந்தியா பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது போட்டியில் அதை விட மோசமாக விளையாடிய இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அதன் காரணமாக 2012க்குப்பின் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. மறுபுறம் 2 வருடங்களாக வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை அடக்கிய நியூசிலாந்து வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்:

முன்னதாக இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா 74% புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. இந்த அடுத்தடுத்த தோல்விகளால் 62.8% என்று சரிந்துள்ள இந்தியா பெயருக்காக மட்டுமே முதலிடத்தில் இருக்கிறது. ஏனெனில் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா 62.5% புள்ளிகளுடன் உள்ளது.

55.6%, 50%, 47.6% புள்ளிகளுடன் முறையே இலங்கை, நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 2021, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா அடுத்தடுத்து தகுதி பெற்று சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறையும் இந்தியா ஹாட்ரிக் முறையாக எளிதாக தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஃபைனல் செல்ல:

ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று தோல்வியால் அந்த எளிய வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையில் இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. எனவே இந்தியா ஃபைனல் செல்வதற்கு அந்த 6 போட்டிகளில் கண்டிப்பாக 4 வெற்றிகளை பெறுவது அவசியமாகும்.

இதையும் படிங்க: அவங்கள குறை சொல்ல விரும்பல.. 12 வருஷம் கழிச்சு இந்தியா தோற்க இதான் காரணம்.. ரோஹித் சோகமான பேட்டி

குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் வென்று சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் 3 – 2 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்ல வேண்டும். ஆனால் சொந்த மண்ணிலேயே தற்போது தோல்வியை சந்தித்துள்ள இந்தியா சவாலான ஆஸ்திரேலியாவில் மீண்டும் தொடரை வெல்லுமா என்பது சந்தேகமாகும். ஒருவேளை அடுத்த 6 போட்டிகளில் 3 தோல்வி அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட டிராவை சந்தித்தால் கூட இந்தியா ஃபைனல் செல்வது கேள்விக்குறியாகும். அப்படி நடந்தால் நியூசிலாந்து, இலங்கை தென்னாப்பிரிக்கா அணிகள் ஃபைனல் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

Advertisement