இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அந்தத் தொடரில் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது..
எனவே அந்த தொடரில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் சமீபத்தில் இலங்கையிடம் 2 – 0* (2) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து அடுத்ததாக இந்தியாவை சந்திக்கிறது. இந்த சூழ்நிலையில் டிம் சவுதிக்கு பதிலாக டாம் லாதம் நியூசிலாந்தின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய கேப்டன் லாதம்:
தம்முடைய தலைமையில் இந்தியாவில் சுதந்திரத்துடன் பயமின்றி விளையாடி வெற்றிக்கான முயற்சிக்க உள்ளதாக டாம் லாதம் கூறியுள்ளார். அத்துடன் அதிரடியாக விளையாடக்கூடிய இந்திய அணி தவறு செய்யும் வரை காத்திருக்காமல் திட்டங்களைப் பின்பற்றி வீழ்த்துவோம் என்று லாதம் கூறியுள்ளார். இது பற்றி இந்தியா புறப்படுவதற்கு முன் அவர் பேசியது பின்வருமாறு.
“என்னுடைய பார்வையில் இது நாங்கள் விளையாடும் சிறந்த கிரிக்கெட்டில் என்னுடைய விஷயங்களை கலந்து தொடர்வது பற்றியதாகும். இந்தியா செல்வது சுவாரசியமான சவாலாக இருக்கும். அங்கே சென்ற பின் நாங்கள் கொஞ்சம் பயமின்றி சுதந்திரத்துடன் விளையாடி இந்தியாவை சந்திப்போம் என்று நம்புகிறேன். அதை செய்தால் எங்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறோம்”
சவாலான இந்தியா:
“கடந்த காலங்களில் இந்தியாவில் அவர்களுக்கு எதிராக பேட்டிங்கில் அதிரடியாக விளையாடிய அணி சிறப்பாக செயல்பட்டதை நாங்கள் பார்த்துள்ளோம். அவர்கள் சில ஷாட்டுகளை அடிக்க முயற்சிப்பார்கள். அதுவரை ஏதாவது நடக்கும் என்று உட்கார்ந்து காத்திருப்பதற்கு பதிலாக அவர்களை அழுத்தத்தின் கீழ் வைத்திருப்பது முக்கியம். இந்தியாவுக்கு சென்ற பின் அங்கே எப்படி விளையாட வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்”
இதையும் படிங்க: 3 வருஷம் கழிச்சி வருண் சக்ரவர்த்தியை டீமுக்குள்ள கொண்டு வந்ததே இதுக்காகத்தான் – பக்கா பிளான்
“அதே சமயம் எங்களுடைய வீரர்கள் அங்கே எப்படி அணுக விரும்புகிறார்கள் என்பதைப் பற்றிய திட்டத்தை கொண்டுள்ளனர். எனவே அதைப் பின்பற்றி நாங்கள் நன்றாக விளையாடுவோம்” என்று கூறினார். இருப்பினும் 21ஆம் நூற்றாண்டில் இந்திய மண்ணில் நியூசிலாந்து ஒரு வெற்றி கூட பெற்றதில்லை. இதைத் தொடர்ந்து இந்தியா – நியூசிலாந்து அணிகள் முதன் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் துவங்குகிறது.



