கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் அந்த தொடரில் அவர் எதிர்பார்த்த அளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தாத வேளையில் அவரை இந்திய அணி ஓரம்கட்டியது. அதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே மீண்டும் இந்திய அணிக்காக கம்பேக் கொடுக்க கடுமையான முயற்சிகளில் வருண் சக்கரவர்த்தி ஈடுபட்டு வந்தார்.
வருண் சக்ரவர்த்தியை சேர்த்ததே இதற்காகத்தான் :
அந்த வகையில் அதற்கு பலனாக நடைபெற்று முடிந்த 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்ற போது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி மீண்டும் தான் போட்டியில் இருக்கிறேன் என்பதை வருண் சக்கரவர்த்தி நிரூபித்து இருந்தார். அதேபோன்று அவரை அருகில் இருந்து கண்காணித்த இந்திய அணியின் பயிற்சியாளரான கம்பீரும் தற்போது மீண்டும் அவருக்கு வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பினை வழங்கியிருந்தார்.
அந்த வகையில் மூன்று ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி முதல் 2 போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்நிலையில் தற்போது வருண் சக்கரவர்த்தியை மீண்டும் இந்திய அணிக்குள் கம்பீர் கொண்டு வந்ததே அடுத்த டி20 உலக கோப்பையை குறிவைத்துதான் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இன்னும் இரண்டு ஆண்டுகளில் 2026 அடுத்த டி20 உலக கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாகவே மூன்று ஆண்டுகள் கழித்து வருண் சக்கரவர்த்தியை இந்திய அணிக்குள் கம்பீர் கொண்டு வந்துள்ளார். தற்போது வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டியில் வருண் சக்கரவர்த்தி சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். அவரது பந்துவீச்சில் சிறப்பான செயல்பாடு வெளிப்படுகிறது. அதோடு தொடர்ச்சியாக அவர் ஸ்டம்புகளை குறிவைத்து பந்து வீசிவருகிறார்.
இதையும் படிங்க : ஒருவேளை மும்பை அணி ரோஹித் சர்மாவை வெளியேற்றினால் இதுதான் நடக்கும் – ஹர்பஜன் சிங் கருத்து
வருண் சக்கரவர்த்தி ஏன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார் என்றால் என்னை பொறுத்தவரை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. அதன் காரணமாகவே அவரை கம்பீர் அணிக்குள் கொண்டு தயார்படுத்த முயற்சிக்கிறார் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



