- Advertisement -
இந்திய கிரிக்கெட்

5 – 0ன்னு குறைச்சு எடை போட்ட.. இந்தியாவுக்கு இந்த வலியை கொடுத்துட்டு போவோம்.. நியூஸிலாந்து வீரர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளையும் நியூசிலாந்து வென்றுள்ளது. அதனால் வரலாற்றிலேயே இந்திய மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று நியூசிலாந்து அணி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

அத்துடன் 2012க்குப்பின் 12 வருடங்களாக சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வென்று வந்த இந்தியாவின் உலக சாதனை வெற்றி நடையையும் நியூசிலாந்து முடித்துள்ளது. இத்தனைக்கும் சென்ற மாதம் இலங்கையில் 2 – 0 (2) என்ற கணக்கில் நியூசிலாந்து படுதோல்வியை சந்தித்தது. ஆனால் அதிலிருந்து மீண்டெழுந்துள்ள நியூஸிலாந்து அணி இந்தியாவில் சரித்திர வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

குறைச்சு எடை போட்டாங்க:

இந்நிலையில் சமீபத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா தங்களையும் சேர்த்து 5 – 0 (5) என்ற கணக்கில் வெல்லும் என்று இந்திய ஊடகங்கள் தங்களை குறைத்து மதிப்பிட்டதாக நியூசிலாந்து வீரர் டாம் பிளண்டல் கூறியுள்ளார். கடைசியில் இந்தியாவுக்கு சொந்த மண்ணில் வலிக்கும் அளவுக்கு சரித்திர வெற்றியை பெற்றுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் கடைசிப் போட்டியிலும் வென்று 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்களை விமர்சித்தவர்கள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு நாங்கள் முதலில் வந்த போது அவர்களுடைய தொலைக்காட்சியில் 5 – 0 என்ற கணக்கில் வெல்வோம் என வாசகங்கள் காணப்பட்டன. அது அது போன்ற வரிகள் இருந்தன. நாங்கள் இலங்கையில் தோல்வியை சந்தித்ததால் அவர்கள் எங்களை குறைத்து மதிப்பிட்டார்கள் என்று சொல்வேன்”

- Advertisement -

இந்தியாவுக்கு வலி:

“ஆனால் இப்போது நாங்கள் சாதித்துள்ளதை பார்த்து அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். உலகின் ஒரு சிறந்த அணியான இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வீழ்த்தியுள்ளோம். அதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் எங்களுக்கு கிடைத்துள்ளது”

இதையும் படிங்க: ஃபாலோ ஆன் 143க்கு அவுட்.. 10 வருடங்கள்.. வங்கதேசத்தை ஓடவிட்ட தெ.ஆ.. இரட்டை சாதனை வெற்றி

“அது எங்களுக்கு சவாலானது. இந்தியா இந்த தோல்வியால் வலியை சந்தித்திருக்கும். ஆனால் நாங்கள் சிரிப்புடன் எங்கள் வீட்டுக்கு திரும்பி செல்வோம். இது என்னுடைய கேரியரில் ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். அடுத்ததாக அவர்களை நாங்கள் 3 – 0 என்ற கணக்கில் தோற்கடிக்க சுவாரசியமாக இருக்கிறோம். அதையும் தாண்டி நாங்கள் ஏற்கனவே சாதித்துள்ளோம்” என்று கூறினார்.

- Advertisement -