IND vs AUS : அறிமுகப்போட்டியிலேயே வரலாற்று சாதனையை நிகழ்த்திய ஆஸி வீரர் – விவரம் இதோ

Todd-Murphy
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் பிப்ரவரி 9-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக கே.எஸ் பரத் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகினர்.

KS Bharat

- Advertisement -

அதேபோன்று ஆஸ்திரேலியா அணி சார்பிலும் 22 வயதான டாட் முர்பி என்கிற சுழற்பந்து வீச்சாளர் அறிமுகமானார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும், அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

Todd Murphy 1

பின்னர் தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து 120 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அதேபோன்று தற்போது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ரவீந்திர ஜடேஜா 66 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் அறிமுகமாகிய ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரரான டாட் முர்பி டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதன்படி இந்திய அணிக்கு எதிரான இந்த முதலாவது இன்னிங்சில் 36 ஓவர்களை வீசியுள்ள அவர் 9 மெய்டன்களுடன் 82 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : அணில் கும்ப்ளேவையே பின்னுக்கு தள்ளி தமிழக வீரர் அஷ்வின் சாதனை – விவரம் இதோ

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரராக அறிமுக போட்டியிலேயே குறைந்த வயதில் (22 வயது, 86 நாட்கள்) 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 2 ஆவது வீரர் என்ற சாதனையை அவர் டென்னிஸ் லில்லிக்கு பிறகு படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement