இன்றைய போட்டியில் தவான் நீக்கம்..!அவருக்கு பதிலாக களமிறங்கிய வீரர் யார் தெரியுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதும் நடைபெறாமல் போனது இன்று சற்று தாமதமாக ஆட்டம் தொடங்கியுள்ளது.டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு.

dhawan
dhawan

இந்திய அணியில் சில மாற்றங்களை விராட் கோலி செய்திருந்தார் அவை தொடக்க ஆட்டக்காரர் தவானுக்கு பதில் புஜாராவை அணியில் சேர்த்துள்ளார் மற்றும் உமேஷ் யாதவ்க்கு பதிலாக குலதீப் யாதவ்யும் ஆடும் லெவன் அணியில் சேர்த்துள்ளார்.

pujarashot

முரளிவிஜய் மற்றும் ராகுல் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள்  எனவும் இந்திய அணி டாஸ் வென்றிருந்தால் கண்டிப்பாக பீல்டிங்கேயே தேர்வு செய்திருக்கும் எனவும் தெரிவித்தார்.மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சற்று உதவும் என்று நினைப்பதாகவும் தெரிவித்தார்.

kuldeep

இங்கிலாந்து அணியில் வழக்கினை சந்தித்துவரும் ஸ்டோக்ஸ் பதிலாக கிறிஸ் வோக்ஸ் இடம்பிடித்துள்ளார் இவரும் ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடதக்கது.டாஸ் வென்ற ஜோ ரூட் இந்திய அணியை விரைவில் வீழ்த்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.