100 டெஸ்டில் சாதித்த அஸ்வினுக்கு பாராட்டு விழா.. தமிழ்நாடு வாரியம் கொடுத்த 2 வியக்க வைக்கும் பரிசு

R Ashwin 500
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் தொடரை 4 – 1 (5) வென்று இந்தியா சாதனை படைத்தது. அதில் தரம்சாலாவில் நடந்த கடைசிப் போட்டியில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிய 14வது வீரர் என்ற மாபெரும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வானார்.

அங்கே சிறப்பாக விளையாடி 2010, 2011 ஆகிய தொடர்களில் சென்னை கோப்பையை வெல்வதற்கு உதவிய அவர் இந்தியாவுக்காகவும் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்திய அணியிலும் தோனியின் ஆதரவைப் பெற்ற அவர் குறுகிய காலத்திலேயே ஹர்பஜன் சிங்கை முந்தி 2017 வரை 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஸ்பின்னராக விளையாடினார்.

- Advertisement -

அஸ்வினுக்கு பரிசு:
குறிப்பாக கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்ப முதலே சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் இந்தியாவுக்காக வேகமாக 50, 100, 150, 200, 250, 300, 350, 400 450 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார். அத்துடன் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அனில் கும்ப்ளேவை முந்திய அவர் அதிவேகமாக 500 விக்கெட்டுகள் மற்றும் அதிக முறை 5 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்தார்.

அத்துடன் உலகிலேயே தன்னுடைய அறிமுகப் போட்டியிலும் 100வது போட்டியிலும் 5 விக்கெட் ஹால் எடுத்த முதல் வீரராகவும் அஸ்வின் உலக சாதனை படைத்தார். இவை அனைத்தையும் தாண்டி இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழ்நாடு வீரராகவும் அஸ்வின் வரலாறு படைத்தார். இதற்கு முன் சீனிவாசன் வெங்கட்ராமன், ஸ்ரீகாந்த், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் போன்ற தமிழக வீரர்கள் கூட 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை.

- Advertisement -

அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து அடையாளமாக விளங்கும் அஸ்வினுக்கு தமிழ்நாடு வாரியம் சார்பில் மார்ச் 16ஆம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஸ்பெஷல் பிளேஷர் மற்றும் செங்கோல் அணிவிக்கப்பட்டது. அத்துடன் 500 விக்கெட்டுகளை பிரதிபலிக்கும் வகையில் 500 தங்க நாணயங்கள் கொண்ட சிறப்பு பரிசு அஸ்வினுக்கு கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: எனக்கே சவால் விடுவாரு.. இன்னும் குழப்பமா இருக்கும்.. 100வது போட்டிக்காக அஸ்வினை பாராட்டிய டிராவிட், கும்ப்ளே

இது போக ஒரு கோடி ரூபாய்க்கான பரிசு காசோலையை தமிழ்நாடு வாரிய தலைவர் என் சீனிவாசன் வழங்கி கௌரவித்தார். அந்த விழாவில் ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, சிஎஸ்கே இயக்குனர் காசி விஸ்வநாதன் ஆகியோரு கலந்து கொண்டு அஸ்வினை பாராட்டி பேசினர். மேலும் அதில் அஸ்வின் குடும்பத்தினரும் ரசிகர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement