ரஞ்சிக் கோப்பை: 129 ரன்ஸ்.. 35/5 என புஜாரா அணியை மிரட்டும் தமிழ்நாடு.. கோவையில் காத்திருக்கும் ட்விஸ்ட்

Ranji Trophy
- Advertisement -

ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் தொடர் அக்டோபர் 11ஆம் தேதி துவங்கியது. அதில் கோயம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் எலைட் குரூப் டி பிரிவில் உள்ள தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதும் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய சௌராஷ்டிரா முதல் இன்னிங்ஸில் தடுமாற்றமாக விளையாடி 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு நம்பிக்கையின் நட்சத்திரம் புஜாரா 16, செல்டன் ஜேக்சன் 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக வசவடா 62* ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சாய் கிஷோர், முகமது, சோனு யாதவ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

தமிழ்நாடு மிரட்டல்:

அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு சாய் சுதர்சன் ஜெகதீசன் ஆகிய துவக்க வீரர்கள் 172 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். அதில் சுதர்சன் அரை சதமடித்து 82 ரன்களிலும் ஜெகதீசன் சதமடித்து 100 ரன்களும் குவித்து அவுட்டானார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த பிரதோஷ் பால் 49, பாபா இந்திரஜித் 40 ரன்கள் எடுத்து அசத்தினர்.

அதைத்தொடர்ந்து பூபதி குமார் 5, சாருக்கான் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் ஆண்ட்ரே சித்தார்த் 38, முகமது 26* ரன்கள் உதவியுடன் தமிழ்நாடு 367 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானாலும் சௌராஷ்டிராவை விட 164 ரன்கள் முன்னிலை பெற்றது. சௌராஷ்ட்ரா அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஜெயதேவ் உனட்கட் 6 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

கோவையில் மழை:

அதன் பின் 164 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய சௌராஷ்டிரா அணிக்கு ஹார்விக் தேசாய் 5 ரன்களில் சோனு யாதவ் வேகத்தில் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் சைரங் ஜானி 3, ராணா 6 ரன்களில் குர்ஜப்நீத் சிங் வேகத்தில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார்கள். அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த புஜாராவை டக் அவுட்டாக்கி அதற்கடுத்ததாக வந்த பிரேரக் மன்கட்டை 1 ரன்னில் காலி செய்தார்.

இதையும் படிங்க: பும்ரா அளவுக்கு தேவையில்ல.. 90% ரெடியானாலும் ஷமியை ஆஸிக்கு தூக்குங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் பேட்டி

அப்போது மழை வந்ததால் மூன்றாவது நாள் ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டது. தற்சமயத்தில் 35-5 என தடுமாறும் சௌராஷ்ட்ரா அணிக்கு களத்தில் வசவடா 15*, செல்டன் ஜேக்சன் 5* ரன்களுடன் உள்ளனர். இன்னும் அந்த அணியை விட தமிழ்நாடு 129 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. எனவே அதற்குள் 5 விக்கெட்டுகளை எடுத்தால் இப்போட்டியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் அதற்கு கோயம்புத்தூரில் மழை மட்டுமே வழி விட வேண்டும்.

Advertisement