பும்ரா அளவுக்கு தேவையில்ல.. 90% ரெடியானாலும் ஷமியை ஆஸிக்கு தூக்குங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் பேட்டி

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் இருந்து வருகிறார். கடந்த 2023 உலகக் கோப்பையில் லேசான காயத்துடன் மிரட்டலாக பந்து வீசிய அவர் இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் பின் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் ஒரு வருடம் கடந்தும் இன்னும் குணமடைந்து இந்தியாவுக்காக விளையாடத் திரும்பவில்லை.

தற்போது 80 – 90% காயத்திலிருந்து குணமடைந்த ஷமி மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் விரைவில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அடுத்து நடைபெறும் நியூசிலாந்து தொடரிலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதன் காரணமாக நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் முக்கியமான பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது.

- Advertisement -

ஷமி கம்பேக் எப்போது:

ஒருவேளை ஷமி விளையாடவில்லையெனில் ஆஸ்திரேலியாவில் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் முழுமையாக குணமடையாவிட்டாலும் ஷமி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தேர்ந்தெடுக்கப்படுவது அவசியம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் காயத்துடனே விளையாடி அசத்திய ஷமி ஆஸ்திரேலியாவிலும் அசத்துவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஷமி விஷயத்தில் அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழுவினர் எம்மாதிரியான அணுகுமுறையை கொண்டுள்ளார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் ஒரு வலுவான நிறுவனத்தை போன்ற ஷமி ஃபிட்டாக இருப்பதை நீங்கள் விரும்புவீர்கள். ஒருவேளை 90% ஃபிட்டாக இருந்தாலும் அவர் திறமையான பவுலர்”

- Advertisement -

90% பிட்னெஸ் போதும்:

“தற்சமயத்தில் அவர் உடல் ரீதியாக பந்து வீசும் விதத்தில் பும்ராவை போல இல்லை. உண்மையில் பும்ரா தான் இப்போது உச்சகட்ட உடல்தகுதியுடன் இருக்க வேண்டும். எனவே நீண்ட காலத்தை பற்றி சிந்திக்காமல் ஷமி ஓரளவு ஃபிட்டாக இருந்தால் அவரை விளையாட வைக்கவே நான் விரும்புவேன். ஷமி போன்றவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி தன்னுடைய ஃபிட்னஸ் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது”

இதையும் படிங்க: வாஷிங்டன் சுந்தரை எதுக்கு டீம்ல எடுத்து இப்படி அசிங்கப்படுத்துறீங்க.. சூர்யாவின் செயலால் – ரசிகர்கள் கேள்வி

“ஏனெனில் அவர் பந்தை ரிலீஸ் செய்யும் விதத்தில் மேஜிக் இருக்கிறது. சில நேரங்களில் மட்டுமே அவர் கடினமாக ஓடி பிட்ச்சில் தாக்கத்தை ஏற்படுத்துவார். எனவே அவரை நான் கொஞ்சம் வித்தியாசமாக கையாள்வேன்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால் அதற்குள் ஷமி வந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement