வாஷிங்டன் சுந்தரை எதுக்கு டீம்ல எடுத்து இப்படி அசிங்கப்படுத்துறீங்க.. சூர்யாவின் செயலால் – ரசிகர்கள் கேள்வி

Washington-Sundar
- Advertisement -

வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வு வழங்கப்பட்ட வேளையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தருக்கும் இடம் வழங்கப்பட்டிருந்தது.

வாஷிங்டன் சுந்தரை சரியாக பயன்படுத்தவில்லை :

ஆனால் வாஷிங்டன் சுந்தரை இந்த தொடர் முழுவதுமே சூர்யகுமார் யாதவ் முழுமையாக பயன்படுத்தவில்லை. அவரை அணியில் எதற்காக எடுத்து இப்படி வீணடிக்க வேண்டும்? என்று இணையத்தில் ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பு வருகின்றனர். ஏனெனில் இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசி 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

- Advertisement -

இப்படி அவர் சிறப்பாக செயல்பட்டும் அவருக்கு அந்த போட்டியில் மீதமிருந்த இரண்டு ஓவர்கள் வழங்கப்படவில்லை. அதேபோன்று இரண்டாவது போட்டியிலும் பவர்பிளே ஓவரில் பந்துவீசிய அவர் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்திருந்தார். அதன் பின்னரும் மீதம் இருந்த மூன்று ஓவர் அவருக்கு வழங்கப்படவில்லை.

அதேபோன்று மூன்றாவது டி20 போட்டியிலும் வாஷிங்டன் சுந்தர் பவர்பிளே ஓவரில் ஒரு ஓவர் வீசி நான்கு ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஆனாலும் அதன்பிறகு மீண்டும் அவருக்கு சூரியகுமார் பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை. இப்படி மூன்று போட்டியிலுமே ஒரு முதன்மை சுழற்பந்து வீச்சாளராக அணியில் சுந்தரை எடுத்துவிட்டு அவருக்கு முழுமையாக வாய்ப்பு தராதது ஏன்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

அதேபோன்று தற்போதைய இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் வலிமையாக இருப்பதனால் எட்டாவது இடத்தில் தான் வாஷிங்டன் சுந்தர் களமிறங்க வேண்டி வருகிறது. அதற்குள் டாப் ஆர்டரில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவரும் மிகச் சிறப்பாக செயல்படுவதால் அவருக்கு பேட்டிங்கிலும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைப்பதில்லை.

இதையும் படிங்க : கெளதம் கம்பீர் சஞ்சு சம்சானின் ரசிகன்.. 4 வருஷத்துக்கு முன்னாடி சொன்னதை நிரூப்பிச்சுட்டாரு.. ஆகாஷ் சோப்ரா

இதன் காரணமாக பந்துவீச்சிலாவது அவரை முழுமையாக பயன்படுத்தி இருக்க வேண்டும். அதனை சூரியகுமார் யாதவ் செய்யாதது ஏன்? என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர், மேலும் இதுபோன்று அரைகுறையாக வாய்ப்பை கொடுத்து அவரை கழட்டி விடுவதற்காகவே தான் இப்படி செய்கிறீர்களா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement