கெளதம் கம்பீர் சஞ்சு சம்சானின் ரசிகன்.. 4 வருஷத்துக்கு முன்னாடி சொன்னதை நிரூப்பிச்சுட்டாரு.. ஆகாஷ் சோப்ரா

Aakash chopra 2
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா ஒயிட் வாஷ் செய்து வென்றது. அந்தத் தொடரில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் 297-3 ரன்கள் குவித்த இந்தியா பின்னர் வங்கதேசத்தை 164 ரன்களுக்கு சுருட்டி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு சஞ்சு சாம்சன் சதமடித்து 111 (47) ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் படைத்தார். கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகமான சஞ்சு சாம்சன் 2021 வரை நிலையான வாய்ப்புகளைப் பெறவில்லை. அதன் பின் கிடைத்த வாய்ப்புகளிலும் அவர் தொடர்ச்சியாக அசத்தவில்லை. குறிப்பாக புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் கடந்த இலங்கைத் தொடரில் அவருக்கு டாப் ஆர்டரில் வாய்ப்பு கொடுத்தார்.

- Advertisement -

சாம்சன் ரசிகன்:

அதில் அடுத்தடுத்து டக் அவுட்டான சஞ்சு சாம்சன் இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. இருப்பினும் கடைசி போட்டியில் அசத்திய அவர் தன்னுடைய திறமையையும் கம்பீர் வைத்த நம்பிக்கையும் காப்பாற்றியுள்ளார். இந்நிலையில் 2020 செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி “சஞ்சு சாம்சன் இந்தியாவில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மட்டுமல்ல. இந்தியாவில் சிறந்த இளம் பேட்ஸ்மேனும் கூட. இது பற்றி யாராவது விவாதிக்க வருகிறீர்களா?” என்று கௌதம் கம்பீர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அந்த வகையில் தம்முடைய ரசிகரான கௌதம் கம்பீரின் வார்த்தையை இன்று சஞ்சு சாம்சன் காப்பாற்றியுள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சன் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மட்டுமல்ல. சிறந்த இளம் பேட்ஸ்மேன் என்று கடந்த 4 வருடங்களுக்கு முன் கௌதம் கம்பீர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்”

- Advertisement -

வெல்டன் சாம்சன்:

“அதன் பின் ஒரு முறை சஞ்சு சாம்சனிடம் நான் பேட்டி எடுத்தேன். அப்போது கௌதம் கம்பீரின் பதிவை நீங்கள் நிஜமாக்குவதை உத்வேகமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் நான் கூறினேன். சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்படும் போது அது பற்றி ட்விட்டரில் பதிவிட கம்பீர காத்திருந்தார். அவர் சாம்சனின் ரசிகன். இப்போதும் அப்படியே பேட்டிங் செய்வதால் கம்பீர் இன்னும் அவருடைய ரசிகனாக இருக்கலாம்”

இதையும் படிங்க: விராட் கோலி மாதிரி பாபர் அசாமுக்கு செய்யாம தப்பு பண்ணிட்டீங்க.. பாகிஸ்தானை விளாசிய ஃபகார் ஜமான்

“ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்த அவர் தரையோடு தரையாக பவுண்டரிகளை அடித்தார். நேராக சிக்சர்களை பறக்க விட்ட அவர் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு எதிராக பின்னங்காலில் சிக்ஸர் அடித்தது வாவ் என்று சொல்ல வைத்தது. இது அவருக்கு முக்கியமான இன்னிங்ஸ். ஏனெனில் தொடர்ச்சியாக வாய்ப்புகளை பெறாத அவருக்கு போட்டியாக ஜெய்ஸ்வால், ருதுராஜ், சுப்மன் கில் ஆகியோர் வருவார்கள். எனவே வெல்டன் சஞ்சு சாம்சன்” என்று கூறினார்.

Advertisement