ரஞ்சி கோப்பை: 410 ரன்ஸ் லீட்.. டெல்லியை சொந்த மண்ணில் சரித்த தமிழ்நாடு.. பிரகாசமாகும் டபுள் வாய்ப்பு

Ranji Trophy 2
- Advertisement -

ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் சௌராஷ்டிரா அணிக்கு எதிராக வென்ற தமிழ்நாடு அணி இரண்டாவது போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது. அப்போட்டி அக்டோபர் 18ஆம் தேதி தலைநகர் டெல்லியில் இருக்கும் அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கியது.

அதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு துவக்க வீரர் கேப்டன் ஜெகதீசன் 65 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி டெல்லி அணியை பந்தாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் தம்முடைய பங்கிற்கு சுமாராக பந்து வீசிய டெல்லியை நேர்த்தியாக எதிர்கொண்டார்.

- Advertisement -

வலுவாக தமிழ்நாடு:

இரண்டாவது விக்கெட்டுக்கு 232 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி தமிழ்நாடு அணியை வலுப்படுத்தியது. அதில் சாய் சுதர்சன் சதமடித்தும் ஓயாமல் டெல்லியை பிரித்து மேய்ந்து இரட்டை சதமடித்து 213 ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் சதமடித்து 152 ரன்கள் குவித்து ஆட்டமுழந்தார்.

இறுதியில் மிடில் ஆர்டரில் ரஞ்சன் பிரதோஷ் பால் தம்முடைய பங்கிற்கு சதமடித்து 117, ஆண்ட்ரே சித்தார்த் 66* ரன்கள் குவித்தனர். அப்போது தமிழ்நாடு 674-6 ரன்களில் தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. டெல்லிக்கு அதிகபட்சமாக நவ்தீப் ஷைனி, ஹிமான்சு சவுகான் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணிக்கு துவக்க வீரர்கள் சனாத் சங்வான் 36, ஹர்ஷ் தியாகி 35 ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

டபுள் வாய்ப்பு:

அடுத்ததாக வந்த 2022 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன் யாஷ் துள் நங்கூரமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் டெல்லி கேப்டன் ஹிம்மத் சிங் 0, ஜான்டி சிந்து 4, மயங் ராவத் 0 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதே போல லோயர் ஆர்டரில் பிரணவ் ராஜுவன்சி 40, நவ்தீப் சைனி, ஹிமான்சு 4 ரன்களில் அவுட்டானார். அதனால் மூன்றாவது நாள் முடிவில் டெல்லி 264-8 என தடுமாறி வருகிறது.

இதையும் படிங்க: ரஞ்சி கோப்பையில் அடித்த சதம் வீண் போகல.. உடனடியாக வாஷிங்டன் சுந்தருக்கு – அடித்த ஜாக்பாட்

அந்த அணிக்கு தனியாளாக போராடும் யாஷ் துள் சதமடித்து 103* ரன்களும் ப்ரான்சு விஜய்ரன் 6* ரன்களுடன் களத்தில் உள்ளனர். தமிழ்நாடு அணிக்கு வாஷிங்டன் சுந்தர், முகமது, குர்ஜப்நீத் சிங் அதிகபட்சமாக தலா 2* விக்கெட்டுகளை எடுத்தனர். தற்சமயத்தில் தமிழ்நாடு இன்னும் 410 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. சொல்லப்போனால் அதற்குள் டெல்லியை சுருட்டினால் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தமிழ்நாடு கூடுதல் புள்ளிகளை பெறுவதற்கும் பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement