தமிழகத்தைச் சேர்ந்த இளம் ஆல் ரவுண்டான வாஷிங்டன் சுந்தர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 52 டி20 போட்டிகள், 22 ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே அவர் இந்திய அணிக்காக அறிமுகமாக இருந்தாலும் நிரந்தர இடம் இல்லாமல் தவித்து வருகிறார்.
இந்திய அணியில் சேர்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் :
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரில் மூன்றாவது வீரராக களமிறங்கி சதம் அடித்து அசத்திய அவருக்கு தற்போது மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் விகாசத்தில் தோல்வியை தோல்வியை இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் இணைக்கப்பட்டுள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் நான்கு ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் மூன்று அரை சதங்களுடன் 265 ரன்கள் அடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக 2021-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர் காபா டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு மிக முக்கியமான வீரராக திகழ்ந்தார். வலதுகை சுழற்பந்து வீச்சாளரான அவர் பவுலிங்கில் சிறப்பாங்க செய்லபடுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் கைகொடுக்க கூடியவர்.
இதையும் படிங்க : சிராஜ், அஸ்வினை இப்படியா யூஸ் பண்ணுவீங்க.. ரோஹித் கேப்டன்ஷிப் பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சனம்
அதன்காரணமாக அவர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மாற்று வீரராக தற்போது பார்க்கப்பட்டுகிறார். எதிர்காலத்தில் அவரது இடத்தை பலப்படுத்தவே தற்போது அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



