சி.எஸ்.கே அணியை விமர்சையாக அசிங்கப்படுத்திய சென்னை ரசிகர்கள் – மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட வீடியோ

CSK
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 114 ரன்கள் குவித்தது.

cskvsmi

- Advertisement -

சென்னை அணியின் முதல் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் சாம் கரன் மட்டும் இறுதி வரை சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு நகர்ந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிகாக் 37 பந்துகளில் 46 ரன்களும், இஷான் கிஷன் 37 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது ஆட்டநாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

ishan kishan

சிஎஸ்கே அணியின் இந்த தொடர் தோல்விகள் சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சிலர் சிஎஸ்கே தோற்றதை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தமிழ்நாட்டில் சிஎஸ்கே அணி தோற்றதற்கு ரசிகர்கள் செய்த இந்த உற்சாக கொண்டாட்டத்தை தங்களது அதிகாரப்பூர்வ இணைய தளபக்கத்தில் பதிவிட்டு பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Advertisement