விஜய் ஹசாரே 2023 காலிறுதி : வலுவான மும்பையை வீட்டுக்கு அனுப்பிய தமிழ்நாடு.. செமி ஃபைனலில் மோதப்போவது யார்?

TN vs MUM
- Advertisement -

இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 2023 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் லீக் சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்ற அணிகள் மோதிய காலிறுதி சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றது. அந்த காலிறுதி சுற்றில் லீக் சுற்றின் ஏ புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்த மும்பை மற்றும் ஈ பிரிவில் 2வது இடம் பிடித்த தமிழ்நாடு அணிகள் மோதின.

ராஜ்கோட் நகரில் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு சக்சேனா ஆரம்பத்திலேயே முகமது சித்தார்த் வேகத்தில் டக் அவுட்டானார். அந்த நிலைமையில் 2வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தோமர் 24 ரன்களில் சாய் கிஷோர் சுழலில் சிக்கினார்.

- Advertisement -

செமி ஃபைனலில் தமிழ்நாடு:
அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் அஜிங்க்ய ரகானே 1 ரன்னில் வருண் சக்கரவர்த்தி சுழலில் அவுட்டான நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் பிஸ்ட்தா 37 ரன்களில் சாய் கிஷோர் சுழலில் ஆட்டமிழந்தார். அதனால் 92/4 என தடுமாறிய மும்பைக்கு மிடில் ஆர்டரில் நட்சத்திர வீரர் சிவம் துபே 1 பவுண்டரி 4 சிக்சருடன் 45 (49) ரன்களும் பவார் 59 (58) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றி ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் 48.3 ஓவரிலேயே மும்பையை 227 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த தமிழ்நாடு சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் பாபா அபாரஜித் மற்றும் முகமது சித்தார்த் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 228 ரன்களை துரத்திய தமிழகத்திற்கு 50 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்த ஜெகதீசன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அந்த நிலைமையில் வந்த பாபா இந்திரஜித் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் நிதானமாக விளையாடிய அவருடைய சகோதரர் பாபா அபாரஜித் 2வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 45 (60) ரன்கள் குவித்து அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த ராஜகோபால் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினாலும் அடுத்ததாக வந்த விஜய் சங்கர் தம்முடைய பங்கிற்கு சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: விஜய் ஹசாரே 2023 காலிறுதி : வலுவான மும்பையை வீட்டுக்கு அனுப்பிய தமிழ்நாடு.. செமி ஃபைனலில் மோதப்போவது யார்?

இறுதியில் பாபா இந்திரஜித் அதிரடியாக 11 பவுண்டரியுடன் சதமடித்து 103* (98) ரன்களும் விஜய் சங்கர் 51* (58) ரன்களும் எடுத்ததால் 43.2 ஓவரிலேயே 229/3 ரன்கள் எடுத்த தமிழ்நாடு 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று வலுவான மும்பையை நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பியது. அதனால் அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்று அசத்திய தமிழ்நாடு வரும் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ள முதல் செமி ஃபைனலில் ஹரியானாவை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement