டிஎன்பிஎல்: 118 ரன்ஸ்.. அஸ்வினின் திண்டுக்கலை ஊதித் தள்ளிய சாய் கிசோரின் திருப்பூர்.. 9 வருட சாதனை வெற்றி

TNPL 2025
- Advertisement -

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூலை 6ஆம் தேதி திண்டுக்கல்லில் இருக்கும் என்பிஆர் காலேஜ் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றில் வெற்றி கண்ட திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் நடப்புச் சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் அதிர்ஷ்டத்தைப் பெற்ற திண்டுக்கல் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக் – தூஷர் ரஹீஜா ஆகியோர் ஜோடி சேர்ந்து ஆரம்பத்திலேயே திண்டுக்கல் பவுலர்களை அடித்து நொறுக்கினார்கள். 11 ஓவர்கள் வரை அபாரமாக விளையாடிய அந்த ஜோடி 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து திருப்பூருக்கு அட்டகாசமான துவக்கத்தைக் கொடுத்தது. அதில் அமித் அரை சதத்தை அடித்து 65 (34) ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

திருப்பூர் அதிரடி:

அடுத்ததாக வந்த கேப்டன் சாய் கிஷோர் 1ரு ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரஹீஜா அரை சதத்தை அடித்து 77 (46) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். மிடில் ஆர்டரில் முகமது அலி 23 (14), சசிதேவ் 20 (11) ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இறுதியில் அனோவன்கர் 25* (12) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவரில் திருப்பூர் 220/5 ரன்களை குவித்து அசத்தியது.

திருப்பூர் அணிக்கு அதிகபட்சமாக கார்த்திக் சரண் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 1, பாபா இந்திரஜித் 9, விமல் குமார் 10, தினேஷ் 3 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 39/4 என ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணிக்கு ஹன்னி சைனி 17, அதுல் விட்கர் 24 என மற்ற வீரர்களும் பெரிய ரன்கள் எடுத்த கைகொடுக்கவில்லை.

- Advertisement -

சாதனை வெற்றி:

அதனால் 14.4 ஓவரில் வெறும் 102 ரன்களுக்கு ஆல் அவுட்டான திண்டுக்கல் படுதோல்வியை சந்தித்தது. கடந்த வருடம் அஸ்வின் தலைமையில் கோப்பையை வென்ற அந்த அணி இம்முறை சொந்த மண்ணில் தோற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பை கோட்டை விட்டது. மறுபுறம் 118 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற திருப்பூர் முதல் முறையாக டிஎன்பிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இதையும் படிங்க: கவாஸ்கரின் 49 வருட சாதனையை உடைத்த கில்.. தோனி, கோலி உட்பட எந்த ஆசிய கேப்டனும் செய்யாத சரித்திரம்

2016 முதல் நடைபெறும் சந்தித்து வந்த தோல்விகளை சாய் கிஷோர் தலைமையில் உடைத்துள்ள திருப்பூர் முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது. அதனால் நடராஜன் முதல் முறையாக கோப்பை வென்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரகுபதி சிலம்பரசன், மோகன் பிரசாத், இசக்கிமுத்து தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement