தோனிக்கு பிறகு..! இந்த இரண்டு இளம் அதிரடி வீரர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம்..! – கங்குலியின் நெகிழ்ச்சி..!

ganguly
- Advertisement -

தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களானா ரிஷாப் பண்ட் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரராண “தாதா” என்று அழைக்கப்படும் சவ்ரோவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

rishabh-pant

- Advertisement -

இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பண்ட் 511 ரன்களை குவித்துள்ளார். இந்த தொடரில் இவரது ஆட்டத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த வியாழக்கிழமை ஹைட்ரபாத்திற்கு எதிரான போட்டியில் ரிஷாப் பண்ட் 63 பந்துகளில் 128 ரன்களை குவித்தது அவரது சிறந்த ஆட்டமாக அமைந்திருந்தது.

மற்றுமொரு மும்பை அணியின் இளம் வீரரான இஷான் கிஷனை எடுத்துக் கொண்டால் 11 போட்டிகள் 238 ரன்களை எடுத்துள்ளார். இவரது நடந்த போட்டிகளில் இவரது ஆட்டத்தை குறிப்பாக கூறவேண்டும் என்றால் இவர் கொல்கத்தாவிற்கு எதிராக 21 பந்துகளில் 62 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த இரு வீரர்களான ரிஷாப் பண்ட் மற்றும் இஷான் கிஷான் இருவருமே விக்கெட் கீப்பர்கள் என்பது மேலும் ஒரு சிறப்பு.

kishanஇவர்கள் இருவரையும் குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் கங்குலி கூறுகையில் “தற்போது ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வரும் இளம் வீரர்களான ரிஷாப் பண்ட் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவருமே மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். இவர்களுக்கு இந்திய அணியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். ” என்று தெரிவித்துள்ளார்.

ganguly1

இவர்களை பற்றி மேலும் கூறுகையில் “இவர்கள் இருவருக்குமே தற்போது சிறு வயது தான் ஆகிறது. அதனால் இவர்கள் இந்திய அணியில் பங்குபெற இன்னும் போதுமான அவகாசம் இருக்கிறது. அதற்குள்ளாக இவர்களின் திறமைகளை இவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும். இவர்கள் இருவருமே கீப்பராக இருப்பதால், இவர்கள் வருங்காலத்தில் தோனி, தினேஷ் கார்த்திக்கிற்கு பிறகு இந்திய அணியில் கீப்பராக நிச்சயம் பங்கு பெரும் வாய்ப்பு ஏற்படும் ” என்று கூறியுள்ளார்.

Advertisement