- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒருநாள் வாழ்ந்தாலும் அவர் மாதிரி வாழனும்.. தோனியின் மீது அன்பை பொழிந்த நியூசிலாந்து வீரர் – விவரம் இதோ

கடந்த 2020-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஓய்வை அறிவித்திருந்தாலும் இன்றளவும் அவர் மீதுள்ள ஈர்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறையாமல் இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வு பெற்ற பின்னரும் ஐபிஎல் தொடரில் விளையாடும் தோனி செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் அவரை பின்தொடர் வந்து ஆதரவு தந்து வருவது அனைவரையும் வியக்க வைத்து வருகிறது.

தோனி மாதிரி வாழனும் :

இந்திய அணிக்காக மூன்று வகையான ஐசிசி கோப்பையையும் பெற்றுக் கொடுத்த ஒரே கேப்டனான தோனி இன்றளவும் மிகச் சிறந்த வீரராக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நீங்கா புகழ் பெற்றுள்ளார். இப்படி தோனிக்கு கிடைக்கும் ஆரவாரத்தை பல்வேறு நாட்டு வீரர்களும் ஏற்கனவே கண்டு வியந்து சில கருத்துக்களை அளித்து இருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ஒருநாள் நான் தோனியின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு விழாவில் வேறொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை நீங்கள் வாழ முடியும் என்றால் அது யாருடைய வாழ்க்கையாக இருக்கும்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த டிம் சவுதி கூறுகையில் : எம் எஸ் தோனி உலகிலேயே அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களின் ஒருவர். அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆவலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்திய வீரர்களை தாண்டி எப்பொழுதுமே தோனிக்கு வெளிநாட்டு வீரர்கள் மத்தியிலும் ஒரு பெரிய ஈர்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ஏற்கனவே தோனியுடன் மைதானத்தில் பல்வேறு அணிகளை சேர்ந்த இளம்வீரர்கள் கலந்துரையாடியதை நாம் பார்த்துள்ளோம்.

இதையும் படிங்க : 111 ரன்ஸ்.. இலங்கையின் ஆதிக்கத்தை உடைத்த 24 வயது வீரர்.. இங்கிலாந்துக்காக 94 வருட சாதனை

ஏற்கனவே பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் தோனி பற்றி புகழ்ந்து பேசிவரும் வேளையில் தற்போது டிம் சவுதி ஒருபடி மேலே சென்று அவரின் வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று கூறியது ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -