பேட் கம்மின்சுக்கு பதிலாக சூப்பர் பவுலரை தட்டி தூக்கிய கொல்கத்தா அணி – யார் தெரியுமா ?

Cummins
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கிய 14 ஆவது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

IPL

- Advertisement -

அதன்படி தற்போது அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் வெளிநாடுகளை சேர்ந்த சில வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு அணிகளும் வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக தற்போது மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கொல்கத்தா அணியின் முன்னணி வீரரான பேட் கம்மின்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை கொல்கத்தா அணி தேடி வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக அணியின் நியூஸிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதியை கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

Southee-2

ஏற்கனவே ஐபிஎல் தொடர்களில் டிம் சவுதி சிறப்பாக விளையாடி உள்ளதால் இம்முறை கொல்கத்தா அணிக்காக அதே போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement