வீடியோ : அதிரடி சிக்ஸரை பறக்க விட்ட நியூசி கேப்டன் – எம்எஸ் தோனியின் ஆல் டைம் சாதனையை சமன் செய்து அபாரம்

Tim Southee Six
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை ஏற்கனவே இவ்விரு அணிகளும் இழந்து விட்ட நிலையில் முதல் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் வழக்கம் போல மிரட்டலாக செயல்பட்ட இங்கிலாந்து 267 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நியூசிலாந்து மண்ணில் 15 வருடங்கள் கழித்து முதல் வெற்றியை பதிவு செய்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த நியூசிலாந்து சொந்த மண்ணில் குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் பிப்ரவரி 24ஆம் தேதி துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

ஆனால் மீண்டும் சுமாராக பந்து வீசிய அந்த அணியை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் 435/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. குறிப்பாக ஜாக் கிராவ்லி 2, பென் டூக்கெட் 9, ஓலி போப் 10 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். ஆனால் அடுத்ததாக களமிறங்கி நியூசிலாந்து பவுலர்களை சரமாரியாக பிரித்து மேய்ந்த இளம் வீரர் ஹரி ப்ரூக் 24 பவுண்டரி 5 சிக்சருடன் 186 (176) ரன்களை 105.68 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

தோனிக்கு நிகராக:
அவருடன் மறுபுறம் தனது பங்கிற்கு நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜோ ரூட் 10 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 153* (224) ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 35, டேவோன் கான்வெ 0, கேன் வில்லியம்சன் 4, வில் எங் 2, ஹென்றி நிக்கோலஸ் 30, டார்ல் மிட்சேல் 13, மைக்கேல் பிரேஸ்வெல் 6 என முக்கிய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்தின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 103/7 என ஆரம்பம் முதலே திணறி வரும் அந்த அணி 2வது நாள் முடிவில் 138/7 ரன்கள் எடுத்து இன்னும் 297 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடி வருகிறது. களத்தில் டாம் ப்ளண்டல் 25*, டிம் சௌதீ 23* ரன்களுடன் இருக்கும் நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜாக் லீச் ஆகியோர் தலா 3 விக்கெட்களை சாய்த்துள்ளனர்.

- Advertisement -

தற்போதைய நிலைமையில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு அதிகப்படியான வாய்ப்பு இருப்பதால் 2வது நாளின் கடைசி நேரத்தில் களமிறங்கிய நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி ஆனதாகட்டும் பார்த்துக் கொள்வோம் என்ற வகையில் களமிறங்கியதிலிருந்தே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்த துவங்கினார். குறிப்பாக ஸ்டுவர்ட் பிராட் வீசிய 40வது ஓவரின் 5வது பந்தில் அதிரடியான சிக்சரை பறக்க விட்ட அவர் 18 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களும் 23* ரன்கள் குவித்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு இதே இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான அவர் பெரும்பாலான தருணங்களில் லோயர் ஆர்டரில் கணிசமான ரன்களை அதிரடியாக எடுத்து வருகிறார். அந்த வகையில் இதுவரை 92 போட்டிகளில் 130 இன்னிங்ஸில் 1898 ரன்களை குவித்துள்ள அவர் 78* சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் கேப்டன் எம்எஸ் தோனியின் சிக்ஸர்கள் சாதனையை டிம் சௌதீ சமன் செய்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தடவல் பேட்டிங்கை நிறுத்த அந்த 2 இந்திய பேட்ஸ்மேன்களை பாலோ பண்ணுங்க – பாபர் அசாமுக்கு மிஸ்பா-உல்-ஹக் ஓப்பன் அட்வைஸ்

கடந்த 2014இல் ஓய்வு பெற்ற தோனி 90 போட்டிகளில் 4876 ரன்களையும் 78 சிக்ஸர்களையும் அடித்துள்ளார். சொல்லப்போனால் இப்போட்டியில் அல்லது விரைவில் இன்னும் 6 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில் மேத்தியூ ஹைடன் (82), கெவின் பீட்டர்சன் (81), சர் விவ் ரிச்சர்ட்ஸ் (84) போன்ற ஜாம்பவான்களையும் மிஞ்சி சாதனை படைக்க அவருக்கு அதிகமான வாய்ப்புள்ளது.

Advertisement